ஒருநிமிடம்
Typography

புலிகள்  பசித்தாலும் புல்லை தின்னாது என்பார்கள். ஆனால் புலிகளும் புல்லுத் தின்னும் என்கிறார்கள். நார் சத்து உணவு சாப்பிடவேண்டும் டாக்டர்கள் ஆலாசனை கூறினார்களோ என்னவோ? 

குரூட் பைபர் அதிகம் உள்ள புல், ஸ்லோ மேச் என்ற மரத்தின் பழம், என்பவற்றை சில சமயங்களில் உண்பது உண்டு என்கிறார்கள். ஒரே நாளில் இருபது தடவைகளுக்கு மேல் புணர்வில் ஈடுபடும் புலிகள் எனக் குறிப்புச் சொல்கின்றார்கள்.

ஈகோ இல்லாமல் ஒற்றுமையாய் வாழ்வதிலும், இரையைப் பகிர்ந்து உண்பதிலும் நற்பெயருடைய, காக்கையின் நிறம் கறுப்பு என்றுதான் நாம் அறிந்திருக்கிறோம். இல்லை வெள்ளைக் காக்கா பறக்குது என்கிறார்கள்.

கூட்டமாகத் திரிந்தாலும், காக்கைகள் ஏகபத்தினி விரதர்கள் என சாட்சியம் கூறுகிறார்கள். நாம் என்னதான் விரதத்துக்கு உண்மையான நம்பிக்கையோடு உணவு வைத்தாலும், அவை சந்தேகத்துடனேயே சாப்பிடுவதாகச் சொல்கிறார்கள்.

இப்படி எல்லாம் யார் சொல்கின்றார்கள் எங்கு சொல்கின்கின்றார்கள் என்பதுதானே உங்கள் கேள்வி..?

சொல்பவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல மருத்துவர்கள். Dr.A.V.அன்பழகன், டாக்டர்.அ.முருகன் டாக்டர்.N.சந்திரசேகரன்.B.V.Sc, நண்பன், Dr.S.இராஜேந்திரன்.B.V.Sc, டாக்டர்.முத்துகோபாலகிருஷ்ணன் ஆகிய மருத்துவர்கள் ஆசிரியர் குழுவாக இருக்கும் கால்நடை மருத்துவர் பக்கத்தில் சொல்கின்றார்கள்.

ஓ..! இது மிருகங்கள் தொடர்பான விடயங்கள் மட்டும் பகிரப்படும் என்று நீங்கள் நினைத்தால் ஏமாந்து போவீர்கள். மனிதர்களின் அன்றாட வாழ்வியல் தேவைகள் பற்றியும், அவை குறித்த ஆலோசனைகள் குறித்தும் நிறையவே எழுதியிருக்கின்றார்கள்.

அறிவியல், இயற்கை மருத்துவம், உடல்நலம், குழந்தைகள் நலம், தொழில்நுட்பம், மூலிகை, வனவிலங்கு, பறவைகள் எனப் பல்வேறு பகுதிகளில் இவ்ரகள் எழுதும் விடயங்கள் புதியவை என்றால், அதை அவர்கள் வாசிப்பிற்குரிய சுவாரசியத்துடன் எழுதியிருப்பது, இத் துறைசார் எழுத்துவகையின் புதிய எல்லை எனலாம்.

அந்தச் சுவாரசியங்களை நீங்களும் அப்படியே சுவைக்க விரும்பினால் நிச்சயம் கால்நடையாக அல்ல கணினி வழியாக கால்நடை மருத்துவர்பக்கத்துக்கு ஒரு விசிட் அடிக்கத்தான் வேண்டும். அதற்கு அழுத்துங்கள் இங்கே..

- அறிமுகம் செய்தவர்'தேவியர் இல்லம் ஜோதிஜி'

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

புதிய சிறுவர் கதை சொல்லி தமிழில் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்