ஒருநிமிடம்
Typography

சங்ககாலத்தில் முறைப்படி இசையும், கூத்தும் அறிந்தவர்களாக இருந்தவரகளாக பாடினியர்கள் இருந்தததாக அறிந்திருக்கின்றோம். வலையுலகில் மனித சமுகம் குறித்த சிந்தனைகள் நிறைந்த

ஒரு வலைப்பதிவாக 'பாடினியார்' வலைப்பதிவினைக் காண முடிகிறது. மகப்பேறு வரமா? சாபமா? என்ற கட்டுரை மூலம்தான் இந்த வலைப்பதிவுக்குள் அழைத்துச் செல்லப்பட்டோம். உள்நுழைந்த பின் அங்கே அனுபவங்களின் வழி பிறந்த சிந்தனைகளில் பல பதிவுகள் இருப்பதைக் கண்டறிந்தோம்.

நாளொரு பதிவு என்றில்லாது, தெரிவின் விரிப்பிலும், தெளிவின் அடிப்படையிலும், எழுதப்பட்ட பதிவுகள் இந்த வலைப்பதிவை அலங்கரிக்கின்றன. மகப்பேறு என்பதன் வலி பற்றிப் பேசும் இப்பதிவர், மக்களின் வலி பற்றியும், இந்திய பரிசோதனை (மனித) எலிகள் என்ற தலைப்பில் எண்ணிப்பார்கின்றார்.

கொஞ்ச நாளைக்கு முன்னால் நெசவாளிகள் கஞ்சித் தொட்டி வைத்து கஞ்சி வாங்கிக்குடிக்கும் நிலைமைக்கு ஆளானார்கள். தேயிலைத் தொழிலாளர்கள் நிலைமை அதைவிட மோசமாக இருந்தது. விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதும், எலிக்கறி தின்றதும். இப்போது நாம் அனைத்தையும் மறந்துவிட்டோம். புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவுகள் நாம் அனுபவித்துத்தானே ஆக வேண்டும் என புதிய பொருளாதாரக் கொள்கையும் கலாச்சார சீரழிவும் என்ற பதிவில் கவலைப்படுகின்றார்.

மாற்றுச் சிந்தனைகளை சுவாரசியமாகவும், அனுபவபூர்வமாகவும் வெளிப்படுத்துவதில், இசை தேர்ந்த பாடினியர் போலவே இந்த வலைப்பதிவர் இருக்கிறார் என எண்ணத் தோன்றுகிறது. பாடினியார் பக்கம் சென்று வர இங்கு அழுத்துங்கள்.

- அறிமுகம் செய்தவர்' ஜோதிஜி'

BLOG COMMENTS POWERED BY DISQUS