ஒருநிமிடம்
Typography

வேகம் மிகுந்த காலமொன்றின் வாழ்நிலை மாந்தர்களாகிப்  பரபரத்துத் திரிகின்றோம். இந்தப் பரபரப்புக்களின் அவசரத்தில்,

பலவற்றை அறிந்து கொள்ள முடியாமலும், தெரிந்தவற்றை மீள் நினைவு கொள்ளமுடியாமலும், இழந்து போய்விடுகின்றோம். அவ்வாறு கடந்து செல்லும் காலங்களில் ஒரு சிலவற்றையாவது, ஒரு நிமிடத்தில் உங்களோடு  பகிர்ந்து கொள்ளும்  விருப்பின் தவிப்பு,  இந்தத்  தொகுப்பு.

தொழில்நுட்பங்களின்  நவீனத்தில் நமதும்,  நாளைய சந்ததியினதும் நினைவுகளில் தொலைந்து போகக் கூடிய  சரிதங்களை, அணுவைத் துளைத்து, எழு கடலைப் புகுத்திக் குறுகத் தறித்த  குறள் போல தரவிழையும் பேரவாவின் ஒரு சிறு முயற்சி இது. தொடரும் உங்கள் ஆதரவில் துலங்கும்  என்ற நம்பிக்கையுடன் முதல் நிமிடத்தை முன் வைக்கின்றோம்.

ஒரு நிமிடம் நின்று; பார்த்து, கேட்டு, பகிர விரும்பும் கருத்துக்களைத் தந்து செல்லுங்களேன்.

BLOG COMMENTS POWERED BY DISQUS