கோடம்பாக்கம் Corner

கடந்த ஞாயிறு இரவு YouTube சமூக வலைத் தளத்தின் மிகவும் பிரசித்தமான நட்சத்திரமும், கவர்ச்சிகரமான பேச்சாளரும், புரட்சியாளருமான கிளேர் வைன்லேண்ட் என்ற பெண்மனி தனது 21 ஆவது வயதில் இயற்கை எய்தியுள்ளார். இவரது மரணத்தினால் இணைய உலகமே அதிர்ச்சி அடைந்தது. இவரது மரணம் அனைவருக்குமே தெரிந்திருந்தது தான். அதை இணையத்தில் பொதுவெளியில் அறிவித்ததே கிளேர் வைன்லேண்ட் தான்.

நான் அடிக்கடி அழுகின்ற ஒருவனில்லை. ஆனால் இந்தப் பெண் நான் இதுவரை பார்த்தவர்களை விட மிக அழகான ஒரு ஆத்மா. இவருடைய பேச்சைக் கேட்டு அந்தப் பெண்ணாலேயே முடிகின்றதென்றால் நான் ஏன் குறை கூறுகின்றேன்.  வாழ்வின் மீது அவளது ஆர்வம். அவளது அணுகுமுறை 21 வருடங்களுக்குள் செய்ய வேண்டிவற்றின் அவளது முடிவு, நீங்கள் ஒருமுறை யூடியூப்பிலுள்ள கிளேர் வைன்லேண்ட்   Zappos பேச்சை ஒருமுறை கேளுங்கள். உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் பேச்சாக அது அமையலாம் என்கிறார். Jonathan Mahan

நுரையீரலையும், சமிபாட்டுத் தொகுதியையும் பாதிக்கும் மிக அரிய வகை நோயான சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் என்ற நோய் காரணமாக நீண்ட நாள் அவதிப் பட்ட நிலையில் தான் இவர் மரணமடைந்துள்ளார்.

இந்த நோய்க்கு பூரணமான நோய்த் தடுப்பு சிகிச்சை முறை இல்லாததால் இது போன்று பாதிக்கப் பட்டு வரும் சிறுவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்காக இலாப நோக்கற்ற முறையில் செயற்படும் Claire's Place Foundation என்ற அறக்கட்டளையை கிளேர் நிறுவியிருந்தார். இந்த நிறுவனம் தான் இவரின் மரணத்தை திங்கட்கிழமை ஃபேஸ்புக் உறுதிப் படுத்தியுள்ளது. இத்தளத்தில் வெளியிடப் பட்ட செய்தியில் வைன்லேண்ட் கிட்டத்தட்ட ஒரு கிழமைக்கு அவசர சிகிச்சைப் பிரிவான ICU இல் அனுமதிக்கப் பட்டு உயிர்க் காப்புப் பொறிமுறையில்  இருந்ததாகவும் மேற்கொண்டு அவர் துன்பத்தை அனுபவிக்காது இருப்பதற்காக அவர் இயற்கையான முறையில் மரணமடைய அனுமதிக்கப் பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இவர் பூரண குணமடைய வேண்டி எனப் பிரார்த்தனை செய்த உலகின் பல நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கும் நன்றி தெரிவிக்கப் பட்டுள்ளதுடன் இது கிளேரின் குடும்பத்தினர் தங்களைத் தேற்றிக் கொள்ள உதவும் என்றும் ஃபேஸ்புக்கில் கூறப்பட்டுள்ளது. TEDx இல் பொதுமக்களுக்கு இது போன்ற நோய்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் மிகவும் கவர்ச்சிகரமாகப் பேசக்கூடிய பேச்சாளர் கிளேர். இவர் 'Every Breath I Take' மற்றும் 'Surviving and Thriving with Cystic Fibrosis' எனும் இரு புத்தகங்களையும் எழுதி வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா அலை முடிந்தபிறகுதான் அஜித் வலிமை படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று அஜித் தரப்பில் முதல் கூறப்பட்டது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒரே படத்தின் மூலம் இரண்டு முக்கியப் பிரச்சினைகளை உயிரோட்டம் குறையாமல் கையாள முடியுமா ? இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா? முடியும் என்று காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விருமாண்டி.

இந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் பெரிய மரியாதையைப் பெற்றுகொடுத்தவர் வங்கமொழித் திரைப்பட இயக்குநரும் ஓவிய மேதையுமான சத்யஜித் ராய்.

குதிரைக்கும் தமிழருக்குமான காலத் தொன்மை தொடர்பு 5 00 000 – 2 00 000 ஆண்டு என்பதற்கு சான்று பகர்வது தொல்லியல் ஆய்வு ஆகும் .

ரஜினியின் அறிக்கையை ஊன்றிப் படித்தால் ஒரு விசயம் தெளிவாகிறது - அவர் அரசியலில் இருந்து விலகுவதாக சொல்லவில்லை, கட்சியை நிச்சயம் துவங்குவேன், ஆனால் இந்த தேர்தலுக்குள் அது நடக்காது என்கிறார்.

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்