கோடம்பாக்கம் Corner
Typography

‘போடா போடி’ பட உருவாக்கத்தின்போது சிம்புவிடம் பல கொடுமைகளை அனுபவித்தார் அப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன். ‘நானும் ரவுடிதான்’ படப்பிடிப்பில் இதை நயன்தாராவிடம் மனவிட்டுப் பகிர்ந்தார் விக்னேஷ்.

இதனால் நயன்தாராவின் பரிதாபத்துடன் அவரது காதலையும் சம்பாதித்துக்கொண்டார் விக்னேஷ். அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சென்னை அண்ணா நகரில் விக்னேஷ்சிவனுக்கு 3 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பை பிறந்தநாள் பரிசாக வாங்கிக் கொடுத்தார். வெகுவிரைவில் அந்த அபார்ட்மெண்டில் குடியேறிய நயன்தாரா, விக்னேஷ்சிவனுடன் ‘லிவிங் டுகெதர்’ வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

சினிமா சந்தையில் தனக்கான செல்வாக்கு சரிந்துவிடக் கூடாது என்பதற்காக விக்னேஷ் சிவன் உடனான வாழ்க்கையை உறுதிப்படுத்தாமல் போக்குக் காட்டி வந்தார் நயன்தாரா. ஆனால் விக்னேஷுடன் ஊர் சுற்றும் படங்களைத் தொடர்ந்து தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துவந்தார். இது நயன்தாராவின் தனிப்பட்ட உரிமை என்பதைப் புரிந்துகொள்ளாத பலர் அவரைப் பொறாமையுடன் விமர்சித்து வந்தனர். நயன் தாரா தனது முன்னாள் காதலர்களை வெறுப்பேற்றுவதற்காகவே இவ்வாறு செய்து வருவதாக அவர்கள் கூறி வந்தார்கள்.

இதற்கிடையில் தனது படங்களின் விளம்பர நிகழ்ச்சிகள், திரையுலகவிழாக்கள் எதற்கும் அறவே வராத நயன்தாரா, ஜீடிவி நேற்று நடத்திய திரையுலக விருது விழாவுக்கு வந்தார். எலி ஏன் அம்மணமாக ஓடுகிறது என்று காத்திருந்தபோதுதான் விளங்கியது நயன் தாராவை விழாவுக்கு வரவழைப்பதற்காகவே சிறந்த நடிகை விருதும் மறைந்த நடிகை ஸ்ரீதேவி பெயரிலான விருதும் என இரண்டு விருதுகளை சுண்டல்போல் அள்ளிக் கொடுத்தார்கள்.

விருதுகளை வாங்கிக்கொண்டு பேசிய நயன்தாரா, “ ரசிகர்களுக்கு நன்றி. நாங்கள் புகைப்படங்களைப் பகிர்வது பற்றி எல்லோரும் கேட்கிறார்கள். நாங்கள் சந்தோஷமாக இருப்பதால் பகிர்கிறோம். சந்தோஷத்தை விட இப்போது நிம்மதியாக உணர்கிறேன். அந்த நிம்மதி யாரிடமிருந்து வேண்டுமானாலும் கிடைக்கலாம். இப்போது எனது வாழ்க்கை துணையிடமிருந்து அது கிடைக்கிறது. அந்த நிம்மதியின் சந்தோஷத்தைதான் நான் பகிரும் படங்கள் நீங்கள் பார்க்கிறீர்கள்” என்று அதிரடியாகப் பேசி விக்னேஷ் சிவன் உடனான தனது திருமண வாழ்க்கையை உறுதிப்படுத்தினார் சிங்கப் பெண்ணான நயன்தாரா.

இதே விருது விழாவில் பிரபுதேவாவுக்கு ‘மாரி’ படத்துக்காக சிறந்த நடன இயக்குநருக்கான விருது அறிவிக்கப்பட்டது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்