கோடம்பாக்கம் Corner
Typography

தமிழ் சினிமாவின் ஒவ்வொரு அசைவுகளையும் உடனுக்குடன் சுவாரசியம் குறையாமல் மக்களுக்குக் கொண்டுசெல்வதில் நாளிதழ்களில் பணிபுரியும் சினிமா செய்தியாளர்களின் பங்கு அளப்பரியது.

கடந்த ஐந்தாண்டுகளாக அவர்களுக்குப் போதாத காலம். தினசரிப் பத்திரிகைகளின் சினிமா செய்தியாளர்களுக்கும் பல சினிமா பி.ஆர்.ஓக்களுக்கும் இடையிலான நட்புறவு ‘ட்விட்டர் பாய்ஸ்’ மற்றும் ‘யூடியூப் ரிவ்யூவர்ஸ்’ ஆகிய இரு குழுவினரால் அழித்தொழிக்கப்பட்டுள்ளதே இதற்குக் காரணம்.

ஒரு திரைப்படம் பூஜை போடுவதில் தொடங்கி, அதன் படிப்படியான வளர்ச்சியைச் செய்திகளாகவும், அதில் நடிக்கும் நடிகர்கள், இயக்குநர் பேட்டியையும் வெளியிடுவது, இறுதியாகப் படம் வெளியான பின் அதற்கு நடுநிலையான விமர்சனம் தருவது வரை, மிகுந்த கருமச் சிரத்தையுடன் இதழியல் பணி செய்து வருவதில் நாளிதழ் சினிமா செய்தியாளர்களின் அர்ப்பணிப்பை அடித்துக்கொள்ள முடியாது. ஆனால் கடந்த ஐந்தாண்டுகளாகப் படத்தின் ‘புரமோஷனுக்கு’ இவர்களை நன்கு பயன்படுத்திக்கொள்ளும் பி.ஆர்.ஓக்கள், தற்போது இவர்கள் போன் செய்தால் கூட எடுப்பதில்லை. பிரஸ் ரிலீஸ் எனப்படும் பத்திரிகைக் குறிப்புகளை மின்னஞ்சலில் அனுப்புவதுடன் தங்கள் தொடர்புகளை நிறுத்திக் கொள்கிறார்கள்.

அதேநேரம் நிகில் முருகன், யுவராஜ், புவன், வள்ளியூர் குணா உள்ளிட்ட வெகுசில சினிமா பி.ஆர்.ஓக்கள் விதிவிலக்காக இருந்து நாளிதழ் சினிமா செய்தியாளர்களை எப்போதும்போல் மரியாதையுடன் நடத்திவருகிறார்கள். 20 முதல் 40 ஆண்டுகளாக முழுநேரப் பணியில் இருக்கும் தினசரிப் பத்திரிகையாளர்கள் எழுதும் விமர்சனங்களுக்கு ஒழுங்காகப் பத்திரிகையாளர் காட்சியும் நடத்துவதில்லை.

இதன் பின்னணியில் ‘ட்விட்டர் பாய்ஸ்’ மற்றும் ‘யூடியூப் ரிவ்யூவர்ஸ்’ ஆகிய இருதரப்பினருக்கும் கள்ளத்தனமாக பணத்தைக் கொடுத்து விமர்சனம் செய்யச் சொல்கிறார்கள். ‘ட்விட்டர் பாய்ஸ்’ என்பவர்கள் பெரும்பாலும் மென்பொருள் உள்ளிட்ட வெவ்வேறு துறையில் பணிபுரிந்துகொண்டு, ஒரு குழுவாக திட்டமிட்டு செயற்கையாக ஒரு படத்தை ட்ரெண்ட் செய்பவர்கள். ‘யூடியூப் ரிவ்யூவர்’ என்பவர்களில் 90 விழுக்காட்டினருக்கு திரைப்படக் கலையின் அடிப்படையோ, அதன் கலைக்கோட்பாடுகள் பற்றியோ, திரை அனுபவத்தை முன்னிறுத்தி ஒரு படத்தை எவ்வாறு அணுகுவது என்பது பற்றியோ ஏதும் அறியாதவர்கள்.

உண்மை இவ்வாறு இருக்கையில் நாளிதழ் சினிமா செய்தியாளர்கள் தங்கள் இருப்பையும் மரியாதையையும், சினிமா பி.ஆர்.ஓக்களின் அறியாமை மற்றும் அடாவடித்தனத்திலிருந்து தற்காத்துக்கொள்ள தங்களுக்கென ஒரு சங்கத்தைத் தொடங்க இருக்கிறார்கள். இன்னும் சில தினங்களில் இந்தச் சங்கத்தை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தொடங்கி வைக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.

ரஹ்மானின் பிறந்த நாளான நேற்று அவரைச் சந்தித்த தினசரி நாளிதழ் சங்கத்தின் செய்தியாளர்களுக்கு அவர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள தகவல் நமக்குக் கிடைத்துள்ளது. 2019-ம் ஆண்டுக்கான திரையுலக விருது விழாவுடன் தினசரிப் பத்திரிகையாளர்களின் சங்கம் தொடங்கப்பட இருப்பதாக அறியவருகிறது.

ரஹ்மானின்பிறந்தநாளுக்கு வாழ்த்துத் தெரிவிக்க நள்ளிரவில் அவர் வீட்டின் முன் குவிந்த இரசிகர்கள்

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்