கோடம்பாக்கம் Corner
Typography

சூப்பர் ஸ்டார் ரஜினியின் " தர்பார்" சுமார் 200 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ரஜினிகாந்தின் சம்பமளாக மட்டும் 100 கோடி, இயக்குனர் முருகதாஸுக்கு 25 கோடி, நயன்தாராவுக்கு 4 கோடி, அனிருத்துக்கு 5 கோடி என படத்தின் சம்பளம் மட்டுமே 150 கோடியைத் தாண்டியுள்ளது என்கிறார்கள்.

அதற்கேற்றபடி படத்தின் வியாபாரமும் அமைய வேண்டும். ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு படத்திற்கு வியாபாரம் இல்லை என கோடம்பாக்கம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்தின் வியாபாரம் மொத்தமாக 200 கோடியைத் தொடுவதே இழுபறியாக உள்ளதாம்.

தமிழ்நாடு 60 கோடி, ஹிந்தி உரிமை 15 கோடி, கேரளா 6, கர்நாடகா 9, ஆந்திரா, தெலங்கானா 10, சாட்டிலைட் உரிமை 33, டிஜிட்டல் 23, வெளிநாட்டு உரிமை 30 கோடி என சுமார் 185 கோடி வரைதான் வியாபாரம் நடைபெற்றுள்ளதாகச் சொல்கிறார்கள்.

மேலும், விநியோகஸ்தர்களிடம் அதிகமான அட்வான்ஸ் தொகை கேட்பதாலும், விநியோக முறையில் தயாரிப்பாளருக்கான சதவீதத்தை அதிகமாக நிர்ணயிப்பதாலும் பலரும் படத்தைத் திரையிடத் தயங்குகிறார்களாம். இதை மெய்பிப்பது போல் ஆன்லைன் புக்கிங் தளங்களில் பல திரையரங்குகளில் புக்கிங் இன்னும் ஓபன் ஆகவில்லை. இன்னும் பல ஊர்களில் தர்பார் பட திரையரங்குகளின் விபரம் இரண்டு மூன்று என்ற அளவிலலேயே இருக்கிறது.

இதன் காரணமாக வெளியூர்களில் அதிகமான திரையரங்குகளில் படம் திரையிட வாய்ப்பில்லை என்பதுதான் தற்போதைய நிலை. வேலை நாளில் படம் வெளியாவது சரியல்ல என்பதே விநியோகஸ்தர்களின் கருத்தாக உள்ளது. படம் வெளியாகும் 9 மற்றும் 10ம் தேதி வேலை நாள் என்பதால் முந்தைய ரஜினி படத்தின் வசூலைக் கூட இந்தப் படம் முதல் இரண்டு நாட்களில் பெற வாய்ப்பில்லை என்கிறார்கள்.

மேலும் டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்க சொல்வதால் உச்சபச்ச இழுபறி நீடிக்கிறதாம். இதற்கிடையில் ‘பிளாட் ரேட்’ விற்றுக்கொள்ள தமிழக அரசு தரப்பில் யாரை ‘கவனிக்க’ வேணடுமோ அவர்களை ‘ரொக்க’மாக சரிகட்டிவிட்டதால் அதற்குச் சிக்கல் இருக்காது என்கிறார்கள். இருப்பினும் முதல் நால் முதல் காட்சியும் அன்றே மேலும் நான்கு காட்சிகளுக்கும் ஆக மொத்த ஐந்து காட்சிகளுக்கு கனஜோராக பல திரையரங்குகளில் முன்பதிவு பரபரப்பாக நடந்து வருகிறது.

ஆக மொத்தத்தில், பொங்கல் விடுமுறையில் தமிழக அரசாங்கம் 'ப்ரிபேய்டாக' அறிவித்து பொங்கல் பரிசாகக் கொடுத்த ஆயிரம் ரூபாயை  9ம் தேதி வெளியாகும் இப்படம் பறித்துக் கொள்ளும்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்