கோடம்பாக்கம் Corner
Typography

தமிழகத்தின் மணப்பாறை முறுக்கு, மண்பாறை காளை மாடுகள் மற்றும் மலை வாழை ஆகியவற்றுக்குப் பெயர் பெற்ற ஊர். அங்கே தற்போது ரஜினிக்கு வைக்கப்பட்ட கட்-அவுட்டால் பெரும் ரகளையாகிக் கிடக்கிறது ஊர்.

மணப்பாறையிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் இருக்கிறது இந்திரா திரையரங்கம். பொதுவாக ரஜினி படங்கள் இந்தத் திரையரங்கில்தான் வெளியாகும். ஆனால் இந்தமுறை, படத்தின் விலை அதிகம் என்பதால் இத்திரையரங்கில் ‘தர்பார்’ வெளியாகாது என்ற நிலை.

ஆனால் ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த சில முந்திரிக் கொட்டை ரசிகர்கள், ரஜினிக்கு இந்தத் திரையரங்கின் வாசலில் வைத்திருக்கும் கட் அவுட்டால் சென்னை தலைமைச் செயலகம் வரை அலற வைத்திருக்கிறார்கள்.

அந்தக் கட் -அவுட்டில் ரஜினியின் தர்பார் படத்துடன் சென்னை ஜார்ஜ் கோட்டையையும் தமிழக அரசு சின்னத்தையும் வைத்து வரைந்து, அரசு சின்னத்தை முறைகேடாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இதைத் தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட் என்ற ஒரு டுபாக்கூர் பத்திரிகையாளர் சங்கம் கண்டித்து புகார் அளித்துள்ளது.

இந்த கட் அவுட் விவகாரம் தற்போது ரஜினியின் கவனத்துக்கும் வந்துவிட்டபோதும், அரசாங்கம் ஆட்சேபம் தெரிவிக்காத வரை கட் அவுட்டை எடுக்க வேண்டாம் என மணப்பாறை மக்கள் மன்றக் கிளையிடம் சொல்லியிருக்கிறாராம்.

BLOG COMMENTS POWERED BY DISQUS