கோடம்பாக்கம் Corner

எல்லா முன்னணி நடிகர்களிடமும் சமூக அக்கறையை எதிர்பார்க்க முடியாது. ஆனால் சூர்யா போன்ற ஒரு சிலர், தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை பொதுக் காரியங்களுக்குச் செலவழிக்கிறார்கள்.

தனது அப்பா நடிகர் சிவகுமார் வழியில் ‘அகரம்’ அறக்கட்டளைத் தொடங்கி ஆண்டுதோறும் சுமார் 50 மாணவர்களுக்குக் கல்வி உதவி வழங்கி வருகிறார் சூர்யா. அவரது இந்தப் பணியைப் பார்த்து அவரது அறக்கட்டளைக்கு உலக அளவில் நன்கொடைகளும் கிடைத்து வருகின்றன. அதேபோல சூர்யா, காசநோய் ஒழிப்பு உள்ளிட்ட விழிப்புணர்வு விளம்பரங்களிலும் நடித்து தனது சமூக அக்கறையை வெளிப்படுத்தி வருகிறார்.

இது ஒருபுறமும் இருக்கத் தனது சொந்த படத் தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயிண்மெண்ட் மூலம் பல கருத்துள்ள திரைப்படங்களைத் தயாரித்து வருகிறார். கடந்த ஆண்டு தனது மனைவி ஜோதிகா நடிக்க ‘ராட்சசி’ என்ற படத்தைத் தயாரித்தார். தமிழக அரசுப் பள்ளிகளில் நிலவும் மிக மோசமான கல்வித் தரம், அடிப்படை வசதிகள் இன்மை ஆகியவற்றைக் குறித்து நேரடியாகச் சாடும் திரைப்படமாக அது அமைந்ததுடன் படமும் வெற்றிபெற்றது.

இந்தப் படத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் முதல்வர் பழனிச்சாமி ஆகியோர் நடிகர் சிவகுமார், சூர்யா இருவரையும் அழைத்து ‘ எதற்காக இப்படியொரு படம் தயாரித்தீர்கள்?’ என்று கேட்டு ‘டோஸ்’விட்டதுடன் ‘நாங்கள் இருக்கும் வரை இனி நீங்கள் நடிக்கும் தயாரிக்கும் படத்துக்கு அரசு மானியமோ, விருதுகளோ தரமாட்டோம்’ என்று காட்டமாகக் கூறி அனுப்பி வைத்ததாக நம்பத் தகுந்த தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 17-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் தமிழ் படங்களுக்கு இடையில் நடந்த போட்டிப் பிரிவில் கலந்துகொள்ள விண்ணப்பித்த ‘ராட்சசி’ படத்தை அரசின் உத்தரவுப்படி திருப்பி அனுப்பிவிட்டதாகவும் தெரிகிறது. இவ்வாறு சூர்யா தயாரித்த ‘ராட்சசி’ படம், சூர்யா தனது சொந்த செலவில் வைத்துக்கொண்ட சூனியம்போல் ஆகிவிட்டது.

இன்னும் ஒன்றரை வருடம் இந்த ஆட்சியின் கீழ் குப்பை கொட்டவேண்டும் என்று யோசித்த சூர்யா, அமைச்சர் செங்கோட்டையனை குஷிப்படுத்துவதற்காக ஒரு புத்தக வெளியீட்டு விழாவைச் சமீபத்தில் நடத்தியிருக்கிறார். பொதுவாக எந்த அரசியல் வியாதியுடனும் மேடையில் இணைந்து தோன்ற விரும்பாத சூர்யா, தனது அகரம் அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை தரும் இரண்டு நூல்களை அச்சிட்டு அதைச் செங்கோட்டையன் கைகளால் வெளியிட வைத்திருக்கிறார்.

பேராசிரியர் ச. மாடசாமி எழுதிய 'வித்தியாசம்தான் அழகு' மற்றும் கிராமப்புறங்களில் படித்து முதல் தலைமுறை பட்டதாரி ஆன மாணவர்கள் எழுதிய அனுபவங்களின் தொகுப்பாக 'உலகம் பிறந்தது நமக்காக' ஆகிய இரண்டு நூல்கள்தான் அவை. புத்தக வெளியீட்டு விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் சூர்யாவைப் புகழ்ந்து பேசினார்.

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

அட்டக்கத்தி தொடங்கி கபாலி வரை அட்டகாசமான மண்ணின் கதைகளைப் படமாகத் தந்தவர் பா.இரஞ்சித்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி தொற்று குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1 அன்று உலக சுகாதார நிறுவனத்தால் அனுசரிக்கப்படுகிறது.

சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்குரா, கௌதம்மேனன்,வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள தமிழ் ஆந்தாலஜி படம் “பாவகதைகள்”.