கோடம்பாக்கம் Corner
Typography

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது அசுரன். இன்னும் தமிழகத்தில் ‘செகண்ட் ரன்’ என்ற இரண்டாம் சுற்று திரையிடலில் சுமார் 11 திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் சுமார் 60 கோடி ரூபாய் அளவிற்கு வசூல் செய்த அந்தப் படத்தின், அந்த வெற்றியின் ஈரம் காய்வதற்குள் தனுஷ் நடிப்பில் வெளியான எனை நோக்கிப் பாயும் தோட்டா வசூலில் வெடிக்காமல் திரையரங்கில் மூன்றாம் நாளே வெளியேறியது.

இப்படிப்பட்ட நிலையில் தனுஷை இரட்டை வேடங்களில் நடிக்க வைத்து கொடி படத்தை இயக்கிய துரைசெந்தில் குமார் மீண்டு அவரை இரட்டை வேடங்களில் இயக்கியிருக்கும் படம்தான் பட்டாஸ். அதில் ஒரு கேரக்டருக்கு தனுஷுக்கு ஜோடியாக சினேகா நடிக்க, இன்னொரு ஹீரோயினாக மெஹ்ரின் பிர்ஜதா நடித்திருக்கிறார்.

வரும் ஜனவரி 15 அன்று வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள பட்டாஸ் திரைப்படத்தை பல விநியோகஸ்தர்கள் வாங்க மறுத்துவிட்டார்களாம். இதனால் வியாபாரத்தில் மிக மந்தமான நிலையே நீடித்து வருவதாக விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்தப்படத்தின் ஏரியா உரிமைகள் வியாபாரமான விவரம் இதுதான்..

சென்னை : 1.50 கோடி ரூபாய்
செங்கல்பட்டு : 4.25 கோடி ரூபாய்
கோவை : 2.75 கோடி ரூபாய்
சேலம் : 1.35 கோடி ரூபாய்
நெல்லை : 90 லட்சம் ரூபாய்
மதுரை : 2.30 கோடி ரூபாய்
தென் ஆற்காடு-வட ஆற்காடு : 2 கோடி ரூபாய்
ஆக மொத்தம் 16.75கோடி ரூபாய் அளவிற்கு மட்டுமே வியாபாரம் செய்யப்பட்டுள்ளது பட்டாஸ்.

ஆனால் தனுஷின் சம்பளம் 8 என்ற தயாரிப்புச் செலவு 26 கோடி என்ற அடிப்படையில் மீதமிருப்பதை சாட்டிலைட், டிஜிட்டல், வெளிநாட்டு உரிமை என்று பேசிக்கொண்டிருப்பதால் படம் இப்போதைக்கு வெளியாகது என்ற நிலை.

அசுரன் படத்தின் மூலம் தமிழகத்தில் தயாரிப்பாளருக்கு நிகர வருவாயாக முப்பது கோடி ரூபாய் வரை கிடைத்துள்ள சூழ்நிலையில் அதில் பாதி அளவுதான் பட்டாஸ் படத்திற்கு வியாபாரம் மூலம் கிடைத்திருக்கிறது. அடிக்கடி படங்களை வெளியிட்டு வந்த விஜய்சேதுபதி போல குறைந்த சம்பளம், குறைந்த பட்ஜெட் தயாரிப்பு என்று இருந்தால் தனுஷின் தலையும் தப்பிக்கும் என்கிறது பாக்ஸ் ஆபீஸ் தரப்பு.

BLOG COMMENTS POWERED BY DISQUS