கோடம்பாக்கம் Corner
Typography

தங்கள் மனம் கவர்ந்த நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது   ரசிகர்கள் அது தொடர்பான தற்சார்பு சமூக வலைக் காணொளிகளை வெளியிடுவது வழக்கம். ஒருபடி அதிகம் போய் நடன வீடியோக்கள் மூலமாகவும் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து மகிழ்வார்கள்.

இந்நிலையில் தற்போது ரசிகர் ஒருவர் வெளியிட்டிருக்கும் வீடியோ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘தர்பார் பேபி வெர்ஷன்’ என்ற அந்த வீடியோ பலராலும் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவில் நடித்துள்ள சமிக்‌ஷா தேவி ஸ்ரீ என்னும் குழந்தை ஏற்கனவே இது போன்ற பல வீடியோக்களை வெளியிட்டிருக்கிறார்.

கத்தியில் இருந்து ரத்தம் வழிவதற்கு பதிலாக குச்சி ஐஸ் உருகி வழிவதும், குட்டி காரில் வந்து வில்லன்களை அடிப்பதும் , துப்பாக்கிக்கு பதிலாக வாட்டர் கன் பயன்படுத்துவதும் ரஜினியைப்போல ஸ்டைலான உடல்மொழி, கண்ணாடி அணிவது வில்லனை அடிப்பது என அந்தக் காணொளியில் ரசிப்பதற்கு ஏராள மான அம்சங்கள் இருக்கின்றன. அந்த வீடியோவை நீங்களும்தான் ஒருமுறை பார்த்து விடுங்களேன்..

BLOG COMMENTS POWERED BY DISQUS