கோடம்பாக்கம் Corner
Typography

பதினைந்து ஆண்டுகளைக் கடந்து இன்னும் கதாநாயகியாக நடித்துவரும் த்ரிஷாவுக்கு ‘96’ படத்துக்குப் பிறகு எதுவும் தோதாக அமையவில்லை. மலையாளத்தில் நிவின்பாலி ஜோடியாக நடித்தபடமும் எடுபடவில்லை. இந்த நிலையில் சதுரங்கவேட்டை 2, கர்ஜனை, பரமபதம் விளையாட்டு மூன்று படங்களில் த்ரிஷா நடித்து முடித்திருந்தார்.

இந்த மூன்றில் முதல் இரண்டு படங்களுக்கும் தலா 65 லட்சம் சம்பளம் வாங்கிய த்ரிஷா, ‘பரமபதம் விளையாட்டு’ படத்துக்கு 30 நாட்கள் கால்ஷீட் கொடுத்து, ஒரு நாளைக்கு ஒன்றைரை லட்சம் என்று சம்பளம் பேசி நடித்துக்கொடுத்தாராம். 45 லட்சம் சம்பளத்தில் 25 லட்சத்தை முன்னதாக வாங்கிக்கொண்ட த்ரிஷா கடைசிநாள் படப்பிடிப்பில் படப்பிடிப்பு தொடங்கும் முன்னரே 20 லட்சமும் கொடுத்துவிட வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டாராம்.

ஆனால் படத்தைத் தயாரித்து வந்த 24 ஹவர்ஸ் என்ற நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியதால் 10 லட்சம் ரூபாயை கடைசிநாள் படப்பிடிப்பில் கொடுக்க அதை வாங்கிக்கொண்டு, கிளைமாக்ஸ் காட்சி மற்றும் பேச் ஒர்க் ஷாட்கள் ஆகியவற்றில் நடித்துக்கொடுக்காமல் கிளம்பிட்டாராம். “10 லட்சம் தயாரானதும் கூறுங்கள். அன்று படப்பிடிப்பு நின்று போனதற்கு ஒன்றைரை லட்சத்தை அதிலிருந்து தருகிறேன். எட்டரை லட்சம் இல்லாமல் படப்பிடிப்பு வரமாட்டேன்” என்று கூறி தனது சொந்தப் படத்தை நொந்த படம் ஆக்கியிருக்கிறார்கள் என்கிறார்கள் தயாரிப்புத் தரப்பில்.

ஒரு வழியாக அவர் கேட்ட பணத்தைக் கொடுத்து, கிளைமாக்ஸ் முடித்து சென்சாரும் முடித்து படத்தை தயார் செய்தால் இப்போது படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு வரமாண்டேன் என்று பேக் அடித்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.

திருஞானம் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் திரிஷா மருத்துவராகவும், மருத்துவரின் தாயாகவும் இரட்டை வேடத்தில் நடித்துள்ளாராம். நந்தா, ரிச்சர்ட் போன்ற காலாவதி ஆன நடிகர்களுடன் நடித்திருக்கும் ஒரு உருப்படியான நடிகர் என்றால் அவர் வேல. ராமமூர்த்தி மட்டுமே.

குறைந்த பொருட்செலவில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை வரும் ஜனவரி 31 வெளியிட்டே தீரவேண்டிய கட்டாயத்துக்கு வந்திருக்கிறாராம் தயாரிப்பாளர். அவர் வாங்கிய கடனுக்கு வட்டி மட்டுமே மாதந்தோரும் 8 லட்சம் கட்டிக்கொண்டிருக்கிறாராம். எத்தனை தொழில்நுட்ப முன்னேற்றங்கள் வந்தாலும் வட்டித் தொழில், நட்சத்திரங்களின் அடாவடியிலிருந்து தமிழ் சினிமா மீளாது போலிருக்கிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்