கோடம்பாக்கம் Corner
Typography

தமிழ் தேசியம் பேசும் தமிழர் அரசியல் அமைப்புகளை முறைவாசல் செய்து கலாய்ப்பதில் கெட்டிகாரர் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட நடிகர், ஆர்.ஜே, பாலாஜி. அவர் நாயகனாக நடித்து வெளியான ‘எல்.கே.ஜி' என்ற அரசியல் முரண்பகடி திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது இவர் ‘மூக்குத்தி அம்மன்’ படத்துக்காக நயன்தாராவை ஆட்டி வைத்திருக்கிறார். முக்குத்தி அம்மன் என்ற படத்தின் பெயர் பக்திப் படம் என்பதுபோல் இருந்தாலும் இது பக்தியின் பெயரால் நடக்கும் அக்கப்போருகளை வெட்டவெளிச்சமாக்குகிறதாம். பக்தியின் பெயரால் தமிழ் நாட்டில் நடக்கும் அத்தனை பிரச்சினைகளைப் பற்றியும் படம் முரண்பகடி முறையில் (ஸ்பூஃப்) வெளித்து கட்டுகிறதாம். அதே சமயம், கடவுளின் பெயரால், தன்னையே முன்னிருத்தும் பலருக்கும் இந்தப்படம் அதிருப்தியைக் கொடுக்கும் என்றும் என்று சொல்கிறது ஆர்.ஜே.பாலாஜி தரப்பு.

சர்ச்சையைக் கிளப்பப் போகும் இந்தக் கதையைக் கேட்ட நயன்தாரா, அதில் மூக்குத்தி அம்மனாக நடிக்கச் சம்மதம் தெரிவித்து, விரதம் இருந்து, படப்பிடிப்பில் காலணி அணியாமல் இருந்து நடித்துக் கொடுத்திருக்கிறார். 90 நாட்கள் இடைவிடாமல் நடந்த படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் படத்தின் கடைசிநாளில் பூசனிக்காய் உடைத்துள்ளார்கள்.

BLOG COMMENTS POWERED BY DISQUS