கோடம்பாக்கம் Corner

நடிகர் விஜய்சேதுபதி என்றாலே வித்தியாசம் என்று காட்டி வருகிறார். ஏற்கெனவே ‘விக்ரம் வேதா’ படத்திலும் ‘பேட்ட’ படத்தில் ரஜினியின் கையால் செத்துப்போகிறவராகவும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்தார்.

அதேபோல மணி ரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் படத்திலும் கிட்டத்திட்ட வில்லன் வேடம்தான் ஏற்றார். இந்த மூன்று வேடங்களுமே விஜய்சேதுபதியின் தரப்பில் போதிய நியாயம் இருக்கும்விதமாக கட்டமைக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ‘மாஸ்டர்’ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து வருகிறார். விஜய், விஜய்சேதுபதி ஆகிய இருவரும் சம்பந்தப்பட்ட காட்சிகளைத் தற்போது படமாக்கி வருவதாக சென்னையில் நடந்த ஒரு திரைவிழாவில் பேசினார் லோகேஷ். அவரிடம் இன்னும் துருவியபோது “ கதைப்படி மாணவர்களை தவறாக வழியநடத்தும் மிக மோசமான ஒரு வில்லனாக விஜய்சேதுபதி நடிக்கிறார். அவர் மீது ரசிகர்களுக்கு இதுவரை வெறுப்பு வந்ததில்லை. ஆனால் மாஸ்டர் படத்தில் அவரது வில்லன் வேடம் வெறுப்பை உண்டாக்கும்.” என்றார்.

இதைக் கேட்ட பத்திரிகையாளர்கள் பலரும் ஒருவருக்கொருவர் புலம்பத் தொடங்கினார்கள். ‘சிறந்த நடிகர் என்று பெயர் பெற்றிருக்கும் விஜய்சேதுபதி வில்லனாக நடிப்பதில் தவறில்லை, ஆனால், நிறைய மாணவ ரசிகர்களைக் கொண்ட அவர், அவர்களைத் தவறாக வழிநடத்தும் வேடத்தில் நடிக்கலாமா?’ என்று கேட்டு வருத்தப்பட்டார்கள். விஜய்சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கிய இரண்டு படங்கள் வெளிவராமல் உள்ளன. இந்தப் படங்களின் நிதிச் சிக்கல் உட்பட, விஜய்சேதுபதி பெருங்கடனில் சிக்கி இருப்பதுதான், அவரை மாஸ்டர் படத்துக்காக இப்படி விலைபோக வைத்துவிட்டது என்ற காதுபடவே பேசிக்கொண்டார்கள்.

இவற்றையும் பார்வையிடுங்கள்

அட்டக்கத்தி தொடங்கி கபாலி வரை அட்டகாசமான மண்ணின் கதைகளைப் படமாகத் தந்தவர் பா.இரஞ்சித்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி தொற்று குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1 அன்று உலக சுகாதார நிறுவனத்தால் அனுசரிக்கப்படுகிறது.

சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்குரா, கௌதம்மேனன்,வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள தமிழ் ஆந்தாலஜி படம் “பாவகதைகள்”.