கோடம்பாக்கம் Corner

நடிகர் சூர்யா, தனது மனைவியை மீண்டும் பிஸியான நடிகையாக மாற்றியிருக்கிறார். இதற்காக அவர் 15 கோடி ரூபாயை தனது 2டி எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்புக் குழுவுக்குக் கொடுத்து வைத்திருக்கிறார்.

இதனால் ஜோதிகா தொடர்ந்து நடிக்கும் படங்களை அவரது தயாரிப்புக் குழு எடுத்துவருகிறது. அந்தப் படங்களும் முதலுக்கு மோசமில்லை என்ற வகையில் ஓடிவிடுகின்றன.

இதை கவனித்த ‘காஸ்ட்லி’ இயக்குநர் அட்லி, தனது மனைவி ப்ரியாவையும் கதாநாயகியாக நடிக்க வைத்து வரிசையாக படங்களைத் தயாரிக்க முடிவு செய்திருக்கிறாராம். இதற்காக கதை கேட்பதற்கு என்று தனது உதவி இயக்குநர்கள் இருவரை அமர்த்தியிருக்கிறார்.

ப்ரியா ஏற்கனவே ‘சிங்கம், நான் மகன் அல்ல’ போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். இருப்பினும் அட்லியை மணந்துகொண்டபின் அவர் தொடர்ந்து நடிக்கவில்லை. இதற்கிடையில், பிகில் படத்தில் ப்ரியாவை ஒரு வேடத்தில் நடிக்க வைக்கலாம் என்று விஜய்யிடம் கேட்டபோது, அவர் கறாராக வேண்டாம் என்று மறுத்துவிட்டாராம்.

இதை தனது நண்பனும் நயன்தாராவின் கதாலருமான விக்னேஷ் சிவனிடம் சொல்லிப் புலம்பியிருக்கிறார் அட்லி. இதைக் கேட்டுக்கொண்ட விக்னேஷ் சிவன், ‘ப்ரியா கதாநாயகியாக நடிக்கும் படத்தில் நயனை கெஸ்ட் ரோல் செய்யச் சொல்கிறேன்’ என்று உறுதி அளித்திருக்கிறாராம்.

எனவே சில்லுக்கருப்பட்டி படத்தின் இயக்குநர் ஹலிதா ஷமீமிடம் தனது மனைவி நடிப்பதற்கான கதை ஏதும் இருக்கிறதா என்று கேட்டிருக்கிறாராம் அட்லி. ஹலிதாவோ ‘அய்யா சாமி ஆளை விடுய்யா... நான் வேற கேங்க்’ என்று அலறி அடித்து ஓட்டம் பிடித்திருக்கிறார்’ அசுரன் படத்துக்கான 100 நாள் சினிமா பார்ட்டியில்

இவற்றையும் பார்வையிடுங்கள்

அட்டக்கத்தி தொடங்கி கபாலி வரை அட்டகாசமான மண்ணின் கதைகளைப் படமாகத் தந்தவர் பா.இரஞ்சித்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி தொற்று குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1 அன்று உலக சுகாதார நிறுவனத்தால் அனுசரிக்கப்படுகிறது.

சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்குரா, கௌதம்மேனன்,வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள தமிழ் ஆந்தாலஜி படம் “பாவகதைகள்”.