கோடம்பாக்கம் Corner
Typography

ஜனவரி 20 ஆம் திகதி திங்கட்கிழமை சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் இடம்பெற்ற உலகப் பொருளாதார மாநாட்டின் போது பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவுக்கு 26 ஆவது வருடாந்த கிறிஸ்டல் விருது வழங்கிக் கௌரவிக்கப் பட்டுள்ளார்.

இந்த விருதினைப் பெற்ற பின் நடிகை தீபிகா படுகோனே உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்தார்.

'இந்த விருதினைப் பெறுவதற்காக நான் பெருமைப் படும் அதேவேளை இந்த விடயத்தையும் குறிப்பிட விரும்புகின்றேன். இந்த விருதை நான் பெற்றுக் கொண்டிருக்கும் இதேவேளை உலகின் ஏதோ ஒரு மூலையில் இன்னுமொரு நபர் தற்கொலை செய்து கொண்டிருப்பார். அதாவது ஒவ்வொரு 40 செக்கனுக்கும் ஒருமுறை ஏதேனும் ஒரு தந்தை அல்லது தாய் அல்லது சகோதரர் அல்லது சகோதரி அல்லது நண்பர், குடும்ப உறுப்பினர் என ஒருவர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

இதற்குக் காரணமாக அவர்கள் பாதை தெரியாது, வெறுமை சூழ்ந்த எண்ணங்களால் தாக்கப் பட்டு சித்திரவதைப் படுகின்றனர். இந்த மன அழுத்தம் மற்றும் உணர்வுகளின் கிளர்ச்சியைக் கடந்து வந்த பெண் தான் நான். இந்த மன அழுத்தங்களும் உணர்வுக் கிளர்ச்சிகளும் உலகளாவிய பொருளாதாரத்தில் 1 டிரில்லியன் டாலர்கள் வீழ்ச்சிக்கு செல்வாக்குச் செலுத்துகின்றன. 2014 ஆமாண்டு நான் இந்த மன அழுத்தத்தால் பாதிக்கப் பட்ட போது நானும் இந்த சிந்தனை ஓட்டத்தையே பெற்றேன். ஆனால் எனது தாயாரின் துணையுடன் சுகாதார சேவையின் ஆலோசனைக்கு உட்படுத்தப் பட்டேன்.

இதன் மூலம் நான் தெரிந்து கொண்டது மன அழுத்தமும், பதற்றமும் நிச்சயம் குணப்படுத்தப் படக்கூடியது என்பது தான். எனது அனுபவப் படி எதையும் ஏற்றுக் கொள்ளும் பண்பானது இதன் முதற்படி ஆகும்.' உலகளவில் தற்கொலை செய்து கொள்ளும் நபர்களைத் தடுத்து அவர்களுக்கு உரிய உதவிகளைச் செய்வதற்காக நடிகை தீபிகா படுகோனே 'The Live,Love,Laugh Foundation' என்ற அறக்கட்டளையை நடத்தி வருகின்றார்.

மனநல விழிப்புணர்வுக்கு அவர் செய்த பங்களிப்புக்காக டாவோஸில் அவருக்கு இந்த கிறிஸ்டல் விருது வழங்கப் பட்டுள்ளது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்