கோடம்பாக்கம் Corner
Typography

சர்ச்சைகளின் வெளிச்சத்தில் குளிர்காய்ந்து வந்த நடிகை சோனாவை சமீப காலமாக பொதுவெளியில் காணமுடியாத நிலையில் தற்போது ஒரு வேண்டுகோளுடன் உள்ளேன் ஐயா சொல்லியிருக்கிறார்.

இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட மலையாளப்படமான பச்ச மாங்கா என்ற படத்தில் சோனா முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இப்படத்தில் அவரோடு நடிகர் பிரதாப் போத்தனும் நடித்துள்ளார். ஜெஷீதா ஷாஜி மற்றும் பால் பொன்மணி தயாரித்துள்ள இப்படத்தை ஜெய்ஸ் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் ட்ரைலரில் நடிகை சோனாவின் கவர்ச்சியான உடை குறித்து பலரும் சோனா இப்படி எல்லை மீறும் கவர்ச்சியுடன் நடிக்கலாமா எனக் கேட்டு அப்படத்துக்காக செய்தி பரப்பி வருகிறார்கள். ஒரு பிரபல தமிழ் நாளிதழ் கூட "ஷகிலா வழியில் சோனா கவர்ச்சியாக நடிக்கிறார்" என்பது போன்ற செய்தியை வெளியீட்டுள்ளது.

மேலும் இப்படம் சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது.இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நடிகை சோனா தான் இனி கவர்ச்சியாக நடிக்கப் போவதில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்து இருந்தார். இந்தப் பச்ச மாங்கா படம் அப்படி கவர்ச்சியை அடிப்படையாக கொண்ட படமாக இருந்தால் பிரதாப் போத்தன் எப்படி நடிப்பார்? என்ற கேள்வியையும் நடிகை சோனா எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் பேசும்போது "பச்சமாங்கா படம் ஒரு கனமான கதையை அடிப்படையாக கொண்ட படம். அப்படத்தின் ட்ரைலரில் என் உடை மற்றும் காட்சியைப் பார்த்து பலர் நான் அதி கவர்ச்சியான நடிகை என்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். அது உண்மை அல்ல.

இந்தப்படத்தை என் உடை மூலமாக கவர்ச்சி படம் என்றோ, என்னை கவர்ச்சி நடிகை என்றோ சித்தரிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். இது மிக சிறப்பான படம். என் கதாப்பாத்திரமும் அப்படியே. படம் வந்தபின் இந்த வார்த்தையை அனைவரும் சொல்வார்கள்" எனச் சொல்லி சோனா  கவலைப்படுகின்றார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்