கோடம்பாக்கம் Corner
Typography

ஒரு மனிதன் பாறையை பிளக்க அதன்மீது சம்மட்டி கொண்டு அடிமீது அடியாக அடித்துக் கொண்டிருந்தான். கடைசியில் நூறாவது அடியில் பாறை பிளந்தது. பாறையை உடைத்தவன், ’நூறாவது அடியில்தான் பாறை பிளந்தது. ஆனால், அதற்கு முன் அடித்த 99 அடிகளும் பாறை பிளப்பதற்கு காரணமாக இருந்தன' என்றான்.

இந்த எதிர்மறை சிந்தனைக்கு சொந்தக்காரர் நடிகர் அருண் விஜய். அவர் நடித்துமுடித்திருக்கும் மாபிஃயா படத்துக்கு ஒரு சிறப்பு உண்டு என்றால் அது அந்தப் படத்தின் இயக்குநர் கார்த்திக் நரேன். கௌதம் மேனனால் காலை வாரிவிடப்பட்டது.

இத்தனைக்கும் துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். இந்தப் படத்தை அடுத்து நரகாசூரன் படத்தை இயக்கினார். இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளராக இருந்த கவுதம் வாசுதேவ் மேனன் படத்திலிருந்து விலகினார். பின்னர் சிலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு படம் திரைக்கு வரவில்லை.

இந்நிலையில்தான் அருண் விஜய்யை நாயகனாக வைத்து இந்த மாஃபியா படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் நரேன்.

ஃபுல் த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கரும், வில்லனாக பிரசன்னாவும் நடித்துள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்தப் படத்தின் டீசர் வெளியாகி ரஜினி உள்ளிட்ட பல்தரப்பு ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

படத்தின் பின் தயாரிப்புப் பணிகள் முடிந்து பிப்ரவரி 21-ம் தேதி இத்திரைப்படம் திரைக்கு வரும் என்று படத்தின் இயக்குநர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS