கோடம்பாக்கம் Corner

ஒரே மேடையில் நிஜம் மற்றும் நிழல் நாயகர்கள். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத 1983-ம் ஆண்டு!

தமிழ் சினிமாவில் விளையாட்டை மையப்படுத்திய படங்களுக்கு மினிமம் கேரண்டி எனப்படும் நிச்சய வசூல் கிடைத்துவிடுகிறது. இதனால் விளையாட்டுப் படங்கள் தொடர்ந்து வருகின்றன. 1983 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை கைபற்றிய காலக் கட்டம் பற்றிய ஒரு திரைப்படம் பிரமாண்டமாக தயாராகிறது .கபீர் கான் இயக்கும் இந்தப் படத்தில் ரன்வீர் சிங், கபில் தேவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்காக ரன்வீர் சிங்குக்குப் பயிற்சி அளித்துள்ளார் கபில் தேவ். மற்ற நடிகர்களுக்கு யஷ்பால் சர்மா, பல்விந்தர் சாது போன்ற வீரர்கள் பயிற்சி அளித்துள்ளனர்.

இதில் தமிழக நடிகரான ஜீவா கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கிருஷ்ணமாச்சாரி கதாபாத்திரத்திலும் அப்போது கேப்டனாக இருந்த கபில் தேவ் கேரக்டரில் நடிகர் ரன்வீர் சிங்கும் சுனில் கவாஸ்கர் கதாபாத்திரத்தில் தாஹிர் ராஜ் பஷின் னும். மொஹிந்தர் அமர்நாத் கதாபாத்திரத்தில் நடிகர் சகிப் சலீம்மும், திலிப் வெங்சர்கார் கதாபாத்திரத்தில் நடிகர் ஆதிநாத் கோத்தாரேயும்,சையத் கிர்மானி கதாபாத்திரத்தில் ஷாஹில் கட்டர் ரும் நடிக்க இருகிறார்கள். வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் இதனை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியிட உள்ளனர்.

கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனம் ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் எண்டர்டெயின்மெண்ட், ஓய் நாட் ஸ்டுடியோஸ் இணைந்து 83 படத்தின் தமிழ் பதிப்பை வெளியிட உள்ளது . அதேபோல நாகார்ஜுனாவின் நிறுவனம் தெலுங்கு பதிப்பை வெளியிடுகிறது.

இந்நிலையில் இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும்நோக்கத்துடன் 1983-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்திருந்த ரியல் ஹீரோக்களும், நிழல் ஹீரோக்களும் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சி சென்னை சத்யம் திரையரங்கில் நடந்தது

இந்நிகழ்ச்சிகாக சென்னை வந்திருந்த கபில்தேவிடம் கேட்டபோது , "நான் தான் அணித் தலைவன். நான் அணியுடன் சேர்ந்திருப்பவன். எல்லோரும் அவர்களின் ஆட்டத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். நான் என் ஆட்டத்தைப் பார்க்க மாட்டேன். அணியின் ஆட்டத்தைத்தான் பார்ப்பேன். அதுதான் கிரிக்கெட் என்பது.

அது ஒரு தனி நபரைப் பற்றியது கிடையாது. எல்லோரும் 100 சதவீதம் முயற்சி செய்தார்கள். அப்படித்தான் உலகக் கோப்பையை வென்றோம். நாங்கள் என்ன செய்தோம் என்று தெரியும். திரைப்படத்தில் அதிலிருந்து எவ்வளவு எடுத்து படமாக்குவார்கள் என்பதைப் பற்றி கருத்து கூறுவது கடினம். எனவே நீங்கள் உங்கள் பக்கக் கதையைச் சொல்லலாம். அவர்கள் எடுப்பார்கள்.

அவர்கள் புத்திசாலிகள். தேவையான ஆய்வுகளைச் செய்திருக்கிறார்கள். முதலில் நான் கதையைக் கேட்டபோது குழப்பமாக இருந்தது. எப்படி அதைத் திரையில் சொல்வார்கள் என்பது தெரியவில்லை. அதைப் பற்றி பேச நிறைய இருக்கிறது. அது எப்படிப் படமாக வரும் என்பதில் எனக்குக் கவலையும் அக்கறையும் உள்ளது. ஆனால் எல்லாம் நல்லபடியாக இருக்கும் என்று நம்புகிறேன்" என்றார்.

கமல்ஹாசனன் நிகழ்ச்சியில் பேசும்போது “83 படத்தை தமிழில் வழங்குவதில் மிகுந்த பெருமையும், மகிழ்ச்சியும் கொள்கிறேன். வரலாற்றின் வெற்றி பக்கங்களை அனைவர் மனதிலும் நீங்காத இடம் பிடித்த கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் திரையில் உருவாக்கி வழங்குவதில் கர்வமும், பெருமையும் கொள்கிறேன். அதுமட்டுமல்லாமல் மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்ற சீரிய கருத்தை இந்த தேசத்து மக்களின் மனதில் விதைத்த வகையில், இந்த அணிக்கு சிறப்பு மரியாதை உண்டு.

முயற்சித்தால் முடியாதது எதுவும் இல்லை என்பதற்கும் இந்த வெற்றியே சான்று. தன்னம்பிக்கையும், மனத்திடமும் இந்த வெற்றிக்கு ஊக்க மருந்து. பல்வேறு மக்களுக்கு தன்னம்பிக்கையும், மகிழ்ச்சியும் தந்த கதை. கபில்தேவ் தலைமையில் மொத்த அணியும் போராடி உலக கோப்பையை வென்ற கதையை நம் மக்களுக்கு தமிழில் அளிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி” என்றார்.

இவற்றையும் பார்வையிடுங்கள்

அட்டக்கத்தி தொடங்கி கபாலி வரை அட்டகாசமான மண்ணின் கதைகளைப் படமாகத் தந்தவர் பா.இரஞ்சித்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி தொற்று குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1 அன்று உலக சுகாதார நிறுவனத்தால் அனுசரிக்கப்படுகிறது.

சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்குரா, கௌதம்மேனன்,வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள தமிழ் ஆந்தாலஜி படம் “பாவகதைகள்”.