கோடம்பாக்கம் Corner
Typography

" பொன்னியின் செல்வன் " படம் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள தகவல் சமூகவலைத்தளங்களில் பரபரப்பாகியுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த படத்தில் சரத்குமார், ஜெயராம், பிரபு, விக்ரம், ரஹ்மான், ‘ஜெயம்’ ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி ஆகியோர் முக்கிய வேடங்களிலும் சிறிய துணை வேடங்களில் லால், அஸ்வின் காக்குமனு, கிஷோர், அர்ஜுன் சிதம்பரம் எனப் பலர் நடிக்கின்றனர்.

ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் பின்னணி இசை அமைக்கிறார். இந்நிலையில் படம் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள தகவல் இப்படம் பற்றிய எதிர்பார்ப்பைக் கிளறியிருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் தனது பதிவில் “பொன்னியின் செல்வன் படத்தின் புகைப்படங்களை சென்ற வாரம் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் என்னிடம் காட்டினார். எல்லாமே சூப்பராக இருந்தது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தயாரிப்பில் இருக்கும் படம் குறித்து அதன் இசை வெளியீட்டு விழாவில் மட்டுமே பேசும் ஏ.ஆர்.ரஹ்மான், இதுபோன்ற எதிர்பார்ப்பைக் கூட்டும் தகவல்களை பகிர்வதோ, உணர்ச்சி வசப்படுவதோ கிடையாது. ஆனால் ‘பொன்னியின் செல்வன்’ படம் குறித்து அவர் வெளியிட்டுள்ள இந்தத் தகவல் பற்றி நெட்டிசன்கள் ஆச்சரியப்பட்டுக்கொண்டு விவாதித்து வருகின்றனர்.

தர்பார் படத்தின் மூலம் நஷ்டத்தை சந்தித்திருப்பதாகக் கூறப்படும் ‘லைகா புரொடக்‌ஷன்’ நிறுவனம் மணிரத்னத்தின் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் இந்த பிரம்மாண்ட படத்தின் திரைக்கதையை மணிரத்னமும், பொன்னியின் செல்வன் நாடகத்தை எழுதி மேடையேற்றி நடித்தவருமான குணச்சித்திர நடிகர் குமரவேலும் எழுதுகிறார்கள்.

எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதும் இப்படத்துக்கான எடிட்டிங் பணியை மணிரத்னத்தின் ஆஸ்தான படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் கவனிக்கிறார். முதல்முறையாக ஹாலிவுட் பாணியில் ‘புரடெக்‌ஷன் டிசைன்’ பணியை தோட்ட தரணியும் இந்திப்பட உலகின் கலை இயக்குநர் வாசிம் கானும் செய்திருக்கிறார்கள்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்