கோடம்பாக்கம் Corner

கோலிவுட்டில் நடித்த அசின் தொடங்கி இலியானா வரை, தமன்னா தொடங்கி காஜல் அகர்வால்வரை பல நடிகைகள் பாலிவுட் படங்களில் நடிக்கப் போனார்கள் . ஆனால் ஒருத்தர் கூட ஹிந்தி படவுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முடியாமல் தவித்தனர். போன வேகத்திலேயே பலர் திரும்பியும் வந்தனர்.

இதில் அசின் உஷாராக திருமணம் செய்துகொண்டு மும்பையிலேயே செட்டிலாகி விட்டார். இந்த வரிசையில் நடிகை டாப்ஸி மட்டும் இன்னமும் பாலிவுட்டில் போராடிக்கொண்டிருக்கிறார். பாலிவுட்டிலிருந்து தீபிகா படுகோன் (கோச்சடையான்), சோனாக்‌ஷி சின்ஹா (லிங்கா), ஹூமா குரோஷி (காலா), ஷ்ரத்தா கபூர் (சாஹோ), வித்யாபாலான் (நேர்கொண்ட பார்வை) ஆகியோர் தமிழில் நடித்தனர்.

அவர்களில் ஒருவர் கூட மீண்டும் தமிழ் பக்கம் தலைகாட்டவில்லை. இந்நிலையில் அஜீத் நடிக்கும் வலிமை படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட்டின் ஏஞ்சல் என வருணிக்கப்படும் யாமி கவுதமை விரும்பி அழைத்தனர். ஆனால், ‘அஜித் என்றால் கண்டிப்பாக கால்ஷீட் இல்லை’ என்று யாமி சொல்லிவிட்டதாக கேஸ்டிங் மேனேஜர்கள் சங்க வட்டாரத்திலிருந்து நமக்கு நம்பகாமான தகவல். அடுத்து பரிணிதி சோப்ராவை அழைக்க, அவரோ, யாமியிடம் மறுத்ததற்கான காரணத்தை தெரிந்துகொண்டு அவரும் பிவாங்கிவிட்டார் என்கிறார்கள். தற்போது காலா படத்தில் நடித்த ஹூமா குரோஷியிடம் கால்ஷீட் கேட்டிருக்கின்றனர். அவர் நடிப்பதுபற்றி இன்னும் உறுதியாகவிலையாம்.

வலிமை படத்தை எச்.வினோத் இயக்குகிறார். இவர் ஏற்கனவே அஜீத் நடித்த நேர் கொண்ட பார்வை படத்தை இயக்கியவர். வலிமை படத்தை பொறுத்தவரை இதுவரை அஜீத் தவிர வேறு நடிகர், நடிகைகள் யார் யார் நடிக்கின்றனர் என்பது பட தரப்பிலிருந்து அறிவிக்கப்படவில்லை. ஆனால் அஜீத் நடிக்கும் சண்டை காட்சி ஐதராபாத்தில் படமாகி வருகிறது. தென்னிந்திய நடிகைகள் பலர் பாலிவுட்டில் நடிக்க ஆர்வம் காட்டும்போது பாலிவுட் நடிகைகள் தென்னிந்திய படத்தில் நடிக்க தயக்கம் காட்டுவது ஏன் என்பது புரியாதபுதிராக இருப்பதாக சிலர் சொன்னாலும் உண்மையான காரணம், 50 லட்சம் மட்டுமே ஊதியம் தரப்படும் என்று கறாராக சொல்லிவிட்டதே காரணம் என்கிறார்கள் காஸ்டிங் மேனேஜர்கள் சங்கத்தில். வலிமை படத்தில் அஜித்துக்கு சம்பளம் 45 கோடியாம்.

இவற்றையும் பார்வையிடுங்கள்

அட்டக்கத்தி தொடங்கி கபாலி வரை அட்டகாசமான மண்ணின் கதைகளைப் படமாகத் தந்தவர் பா.இரஞ்சித்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி தொற்று குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1 அன்று உலக சுகாதார நிறுவனத்தால் அனுசரிக்கப்படுகிறது.

சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்குரா, கௌதம்மேனன்,வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள தமிழ் ஆந்தாலஜி படம் “பாவகதைகள்”.