கோடம்பாக்கம் Corner
Typography

பன்முக உள்ளடக்கங்கள், ரியாலிட்டி நிகழ்ச்சிகள் எனக் கவரும் டிஸ்கவரி தொலைக்காட்சியின் வெற்றிகரமான நிகழ்ச்சிகளில் ஒன்று 'மேன் வெர்சஸ் வைல்ட்' . இந்நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார் என்பதை தெரிந்துகொண்டிருப்பீர்கள். இதற்கான படப்பிடிப்பு மைசூரில் நடந்து வருது.

இந்த நிகழ்ச்சியின் நாயகன் பியர் கிரில்ஸ், அடர்ந்த வனப்பகுதியில் ஆபத்தான சூழ்நிலைகளில் எவ்வாறு உயிர் பிழைத்திருப்பது, அங்கிருந்து எப்படி தப்பி வருவது குறித்து மக்களுக்குக் கற்றுத் தருகிறார். சில பல மாதங்களுக்கு முன் உத்தரகாண்ட் மாநிலம் ஜிம் கார்பெட் தேசிய வன உயிரியல் பூங்காவில் பிரதமர் மோடி, வனவிலங்குப் பாதுகாப்பை மையக் கருத்தாக கொண்டு, பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளர் பியர் கிரில்ஸுடன் இணைந்து பங்கேற்ற 'மேன் வெர்சஸ் வைல்ட்' நிகழ்ச்சி, ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந் நிலையில் இந்த நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொள்வதாக தகவல்கள் வெளியானது. அவர் இந்நிகழ்ச்சிகாக எங்கே சென்றுள்ளார் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் அறிந்துகொள்ளத் துடித்தனர். அவர் ,கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள பந்திபுரா புலிகள் காப்பகத்தில் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சிக்கான இரண்டு நாள் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். இது, 800 ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள இந்த பந்திபூர் வனப்பகுதியில் அமைந்திருக்கிறது. இது, செழிப்பான, அடர்த்தியான, நீண்ட காட்டின் நடுவே உள்ளது.

1931ம் ஆண்டு முதன் முதலில் மைசூர் மஹாராஜாவால் இந்த வனப்பகுதி 90 ச.கி.மீ பரப்பளவு கொண்ட வனவிலங்கு பூங்காவாக அறிவிக்கப்பட்டது. 1941ம் ஆண்டில் இங்குள்ள உள்ளூர் தெய்வமான வேணுகோபாலஸ்வாமியை குறிப்பிடும் விதத்தில் வேணுகோபாலா வனவிலங்கு பூங்கா என்றும் மறுபெயரிடப்பட்டது. நாகூர், கபினி மற்றும் மோயார் போன்ற ஆறுகளால் சூழப்பட்டிருக்கும் இந்த வனவிலங்கு பூங்காவின் எல்லா மூலைகளிலிருந்தும் பயணிகள் உள்ளே போய் சகலரும் பார்த்து ரசிக்கலாம்.

இந்த வனவிலங்கு பூங்காவில் புலிகள், நான்கு கொம்பு மான், ராட்சத அணில், யானை, அரிவாள் மூக்கன், காட்டுப்பன்றி, சிறுத்தை, கரடி மற்றும் காட்டெருமை போன்ற விலங்குகள் வசிக்கின்றன. இவை தவிர சில அரிய புகலிடப்பறவைகள் மற்றும் காட்டுப்பறவைகளும் இங்கு காணப்படுகின்றன. பழுப்பு மூக்கு ஆந்தை, தூக்கணாங்குருவி, மரங்கொத்தி, மீன் கொத்தி போன்றவற்றுடன் பலவகைக்குருவிகள் மற்றும் பூச்சிப்பிடிப்பான் பறவைகளும் இங்கு நிறைந்துள்ளன.

மேலும் பந்திபூர் தேசிய வனவிலங்கு பூங்கா பலவிதமான அரிய தாவர இனங்களையும் கொண்டுள்ளது. இவற்றில் தேக்கு, நெல்லி, மூங்கில், கருங்காலி, சந்தனமரம், நாவல் மரம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. சுற்றுலாப்பயணிகள் காலை 10 மணியிலிருந்து மாலை 6 மணி வரை இந்த வனவிலங்கு பூங்காவுக்குள் விஜயம் செய்யலாம். நுழைவுக்கட்டணமாக இந்தியப்பயணிகளுக்கு 10 ரூபாயும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு 150 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்