கோடம்பாக்கம் Corner

நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் உலக நாடுகளை அச்சுறுத்தும் கரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கையாள வேண்டிய வழிமுறைகளைக் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் :

1) இறைச்சிகளுக்கும், சமைத்த உணவுகளுக்கும் வெவ்வேறு வெட்டும் பலகைகளையும், கத்திகளையும் பயன்படுத்துங்கள்.

2) சமைத்த உணவுகளையும், இறைச்சியையும் கையாளும்போது கைகளை நன்கு கழுவிக் கொள்ளுங்கள்.

3) நன்கு சமைத்த உணவுகளையே உண்ணுங்கள்.

4) ஒருமுறை பயன்படுத்தும் முகக்கவசங்களை பயன்பாட்டுக்குப் பிறகு உடனடியாக அப்புறப்படுத்திவிடவும். அப்புறப்படுத்தியதும் கைகளை நன்கு கழுவி விடவும்.

5) இருமல் மற்றும் காய்ச்சல் இருப்பவர்களோடு நெருக்கமாக இருப்பதைத் தவிர்க்கவும்.

6) அழுக்கான ஆடைகள் மற்றும் காலணிகளை குடும்ப உறுப்பினர்களிடமிருந்து விலக்கவும்.

7) நோய்வாய்ப்பட்ட விலங்குகளிடமிருந்தும், கெட்டுப்போன மாமிசங்களிடமிருந்தும் விலகியிருக்கவும்.

8) குறிப்பாக விலங்குகளையும், விலங்குகளின் பொருட்களையும் தொட்ட பிறகு அடிக்கடி கைகளை சோப்பு போட்டுக் கழுவுங்கள்.

9) இருமலோ, காய்ச்சலோ இருந்தால் பயணத்தைத் தவிர்க்கவும்.

10) நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் சி உணவுகளை அதிகம் உண்ணுங்கள்

இவற்றையும் பார்வையிடுங்கள்

அட்டக்கத்தி தொடங்கி கபாலி வரை அட்டகாசமான மண்ணின் கதைகளைப் படமாகத் தந்தவர் பா.இரஞ்சித்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி தொற்று குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1 அன்று உலக சுகாதார நிறுவனத்தால் அனுசரிக்கப்படுகிறது.

சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்குரா, கௌதம்மேனன்,வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள தமிழ் ஆந்தாலஜி படம் “பாவகதைகள்”.