கோடம்பாக்கம் Corner

'தர்பார்' திரைப்படத்தை வாங்கி விநியோகித்த தமிழ்த் திரைப்பட விநியோகஸ்தர்கள், ரஜினி வீட்டை முற்றுகையிட்டு ஏமாந்து திரும்பினர். தர்பார் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடாததால், தங்களுக்கு நேர்ந்த பெரும் நஷ்டத்தை ஈடு செய்ய வேண்டும் என அவர்கள் ரஜினியைக் கோரி வருகின்றனர்.

இதனால் திரைத்துறையினர் மத்தியிலும் - தமிழக மக்கள் மத்தியிலும் ரஜினிக்கு ஏற்பட்டுள்ள அவப் பெயர் மற்றும் களங்கத்தைப் போக்கும் வகையில், மத்திய்அரசு, வருமான வரித்துறையை, மறைமுகமாக ஏவி விட்டுள்ளதா எனும் சந்தேகம், தமிழக அரசியல் பார்வையாளர்கள் ஊடகத்துறை சார்ந்தோர் மத்தியில் எழுந்துள்ளது.

இதுபற்றி பல மூத்த பத்திரிகையாளர்களிடம் பேசினோம். ‘இக்கட்டான இந்த நேரத்தில், ரஜினிக்கு உதவுவதன் மூலம், தங்கள் கட்சிக்கு ஆதரவாக அவரை அரசியலில் வளைத்து விடலாம் எனும் ஆரூடமே, மத்திய அரசின் இந்த அனுசரணைக்குக் காரணம் என்பதைக் கூட புரிந்துகொள்ள முடியாத அறிவிலிகளா தமிழர்கள்?’ என்கிறார்கள் அவர்கள் .

ரஜினியின் இந்த நெருக்கடிக்குக் காரணம் எனக் கருதப்படும் விநியோகஸ்தர்களின் வீடுகளில் ,நேற்று காலையிலிருந்து வருமான வரித்துறையினரை வைத்து மத்திய அரசு ரெய்டு நடத்தி வருகிறது. அதில் மிக முக்கியமாக, மதுரையைச் சேர்ந்த பிரபலமான சினிமா பைனான்சியர் அன்புசெழியன் வீட்டில் ரெய்டு நடந்து வருகிறது. அன்புச்செழியன்தான் "தர்பார்" பட விநியோகஸ்தர்களுக்கு, பைனான்ஸ் கொடுத்தவர். எனவே, ரஜினிக்கு எதிரான இந்தப் போராட்டத்தை முறியடிக்க, அன்புச்செழியன் வீட்டில் ரெய்டு நடத்தி மிரட்டினால், அன்புச்செழியனிடம் பணம் பெற்ற விநியோகஸ்தர்கள் அனைவரும் பயந்து விடுவார்கள் என்ற கணிப்பே, வருமானவரித்துறை நடத்தும் இந்த ரெய்டின் பின்னணி என்று சில சீனியர் செய்தியாளர்கள் உடைத்துப் பேசுகிறார்கள்.

‘ஓடாத தமது படத்தால் நேர்ந்த நெருக்கடியில் இருந்து தப்பிக்கவே, குடியுரிமைச் சட்டத்திற்கு ஆதரவாக ரஜினிகாந்த் பேட்டி அளித்து வருகிறார், கருத்துத் தெரிவிக்கிறார் என்பதை எல்லோரும் எளிதில் புரிந்து கொள்ளவேண்டும்’ என்பது இன்னும் சிலரின் கருத்தாக இருக்கிறது. அரசியலில் அடியெடுத்து வைப்பதற்கு முன்னரே, சிஸ்டமே மாற்றப்பட வேண்டும் என கூறிய ரஜினி, தனது இழப்பை தற்போதைய பி.ஜே.பி சிஷ்டத்தை தந்திரமாக பயன்படுத்தி பணம் பண்ணப்பார்க்கிறார் ’ என்பது இன்னும் சில இளைய பத்திரிகையாளர்களின் கருத்தாகவும் இருக்கிறது.

ஆயால் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக அமைச்சர் ஜெயக்குமார், வருமான வரித்துறைச் சோதனைக்கும், அரசுக்கும் எதுவித தொடர்பும் இல்லை. இது ஜனநாயக நாடு. இங்கு யாரும் யாரையும் பழிவாங்க முடியாது எனவும், வருமான வரித்துறையின் கடமையினை, அரசுடன் தொடர்புபடுத்துவது தவறு எனவும்குறிப்பிட்டார்.

இவற்றையும் பார்வையிடுங்கள்

அட்டக்கத்தி தொடங்கி கபாலி வரை அட்டகாசமான மண்ணின் கதைகளைப் படமாகத் தந்தவர் பா.இரஞ்சித்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி தொற்று குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1 அன்று உலக சுகாதார நிறுவனத்தால் அனுசரிக்கப்படுகிறது.

சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்குரா, கௌதம்மேனன்,வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள தமிழ் ஆந்தாலஜி படம் “பாவகதைகள்”.