கோடம்பாக்கம் Corner

வருமான வரி ரைடும், நெய்வேலியில் பாஜகாவின் போராட்டமும் விஜயின் 64வது படத்துக்கு பெரும் இலவச விளம்பரமாக அமைந்துவிட்டது. இதனை விளக்கும் விதமாக விஜய் ரசிகர் ஒருவர் வடிவமைத்த போஸ்டர் செம ட்ரெண்டாகிவருகிறது.

மறைந்த 'துக்ளக்' ஆசிரியர் சோ பலதடவைகள் தனது உரைகளில் சொன்னதும், அன்மையில் துக்ளக் 50 வது ஆண்டு விழாவில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் நினைவு கொண்டதுமான விடயம், 'துக்ளக்' கின் வளர்ச்சிக்கும், சோ வின் பிரபலத்துக்கும், திமுகவின் போராட்டங்கள், பெரியாரின் போராட்டங்களும் துணையானது என்பது.

அதுபோன்ற சம்பவமே அன்மையில் விஜய் விடயத்திலும் நடந்திருப்பதாக அவரது ரசிகர்கள் உணரந்திருப்பதன் வெளிப்பாடே இந்தப் போஸ்டர் எனலாம்.

விஜய் நடிக்கும் 'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு,அரசுப் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரிச் சுரங்கத்தில் நடந்து வந்த நிலையில்,விஜய்யை திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என சென்னைக்கு அழைத்து சென்றனர். இதனைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் விஜய் வீட்டிலிருந்து கணக்கில் காட்டப்படாத ஆவணங்களோ ரூபாயோ எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், நேற்று விஜய் மீண்டும்நெய்வேலி சுரங்கத்தில் நடைபெறும் படபிடிப்பில் கலந்துக் கொண்டார்.

மாஸ்டர் திரைப்படத்தின் படபிடிப்பிற்கு நெய்வேலியில் என்.எல்.சி. சுரங்கத்தில் அனுமதி அளிக்கப்பட்டது தவறு என சுரங்கத்தின் முன் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுரங்கம் அமைந்துள்ளஇடத்தில் படபிடிப்பு நடத்த எப்படி அனுமதி அளிக்கலாம் எனவும் கேள்வி எழுப்பி கோஷம் எழுப்பினார்கள். மேலும் என்.எல்.சி. சுரங்கம் உள்ள பகுதியில் பயிற்சி பெற்றவர்கள்மட்டுமே செல்ல வேண்டும் என பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு போலீஸ் அவர்களை அப்புறப்படுத்தியது.இதையடுத்து, பாஜகவினர் போராட்டத்துக்கு எதிராக நடிகர் விஜய்க்கு ஆதரவு தர அவரது ரசிகர்மன்றத்தினர் சுமார் 200 பேர் படப்பிடிப்பு தளத்துக்கு வந்ததால் பதற்றம் ஏற்பட்டது.பின்னர் இரு தரப்பினருமே அங்கிருந்து விரட்டப்பட்டார்கள்.

இந்தச் சம்பவங்களுப் பின்னதாக விஜய் படப்பிற்கு அவரது ரசிகர்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக நெய்வேலிக்குச் செல்வதாக, வலைத்தளங்களில் வலம் வரும் வாகன அணிவகுப்பு வீடியோவும், இலவச விளம்பர போஸ்டரும், சோ வின் உரையை மீளவும் நினைவுபடுத்துகிறது என்கிறார்கள். இவற்றையெல்லாம் பார்க்கையில், கிராமங்களில் பேசப்படும்  'சும்மா கிடந்த சங்க ..' சொல்லடைதான் ஞாபகத்துக்கு வருகிறது.

நடிகர் சிம்புவுக்குத் திருமணம் எனும் செய்திகள் வெளியாகியதைத் தொடர்ந்து, பல இடங்களிலம் இது தொடர்பான பேச்சுக்கள்  இடம்பெற்று வருகின்றன. சிம்புவின் குடும்பத்தினர் வரையும் இந்தச் செய்திகள் சென்று சேர்ந்துள்ளன. 

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

தமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.

எமது அன்றாட சிக்கன போக்குவரத்து தேவைகளுக்கு பெரிதும் கைகொடுத்து உதவுவது மிதிவண்டிகள்.

இன்று ஜூன் 07ஆம் திகதி உலக உணவு பாதுகாப்பு நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது.

ஆடுகளம் படத்தின் மூலம் பிரபலமாகி, ‘ஹரிதாஸ்’ படத்தில் நடிப்பின் உச்சம் தொட்டு நின்ற எதார்த்தக் கலைஞன் நடிகர் கிஷோர்.

சென்ற 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருமண பந்தத்தில் இணைந்துகொண்ட ஆர்யா&சயீஷா காதல் ஜோடியின் திருமண நிகழ்வின் உத்தியோகபூர்வ வீடியோ சமீபத்தில் வெளியாகி உள்ளது.