கோடம்பாக்கம் Corner

‘இறுதிச் சுற்று’ படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு அறிமுகமானார் ரித்திகா சிங். அடிப்படையில் குத்துச் சண்டை வீராங்கனையான இவர் மும்பையில் வசித்துவருகிறார். இறுதிச் சுற்றைத் தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா போன்ற படங்களில் மொக்கை வேடங்களில் நடித்ததால் அவருக்கு அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகள் வரவில்லை.

தற்போது மூன்று வருட இடைவெளிக்குப்பின் ‘ஓ மை கடவுளே’ படத்தில் அசோக் செல்வனின் சிறுவயது தோழியாக இருந்து அவரைத் திருமணம் செய்துகொள்ளும் பெண்ணாக நடித்திருக்கிறார். காதலர் தினத்தன்று விரைவில் வெளிவரவிருக்கும் இப்படத்தின் பத்திரைக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. அதற்கு வித்தியாசமாக இருக்கட்டும் என்று ஆட்டோவில் வந்து இறங்கினார் ரித்திகா சிங். இந்தப் படத்தில் கடவுளாக நடித்திருக்கும் விஜய் சேதுபதி தரும் ஒரு தங்க டிக்கெட்டின் உதவியால், தன்னை பாடாய் படுத்தும் ரித்திகா சிங்கிடம் இருந்து தப்பித்து தனது முன்னாள் காதலில் வாணி போஜனுடன் கொஞ்ச நாட்கள் வாழ்ந்துவிட்டு வரும் வேடத்தில் அசோக் செல்வன் நடித்துள்ளார்.

கதைப்படி வாணி போஜனுடன் ஒரு எதிர்பாராத சந்திப்பில் அசோக் செல்வனின் ஜொள்ளை கவனித்துவிட்டு அவரை வீட்டுக்கு வந்ததும் அவரை கன்னத்தில் அறைவதுபோல காட்சி. இரண்டு டேக்குகள் அறைவதுபோல் நடித்துள்ளார் ரித்திகா சிங். ஆனால் அது உண்மையாக இல்லை, என இயக்குநர் கூற, அசோக் செல்வன் பெருந்தன்மையுடன் ‘ உண்மையாகவே என்னை அடித்துவிடுங்கள் பொறுத்துக் கொள்கிறேன் என்றாராம். மூன்றாவது டேக்காவது சரியாக வரவேண்டும் என குத்துச் சண்டை வீரரான ரித்திகா நிஜமாகவே அறைய, அசோக் செல்வன் கண்ணத்தில் அடுத்து 45 நிமிடத்துக்கு ரித்திகாவின் நான்கு விரல் அச்சுக்கள் மறையவில்லை. ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டதாகச் சொல்கிறார் இயக்குநர் அஷ்வத் மாரித்து.

பத்திரிகையாளர் சந்திப்பில் இதுபற்றி வாய் திறக்காத ரித்திகா சிங், “இந்தப்படம் எனக்கு மிக முக்கியமான படம். மூன்று வருடங்களுக்கு பிறகு தமிழுக்கு வந்துள்ளேன். இப்படக்குழு அனைவரும் என் மீது மிகப்பெரும் நம்பிக்கை வைத்துள்ளார்கள். தயாரிப்பாளர் அபிநயா என்னுடைய சகோதரி போல் மாறி விட்டார். இயக்குநர் அஷ்வத் மிகத் தெளிவானவர். காட்சிகள் எப்படி வர வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார். சாரா மிகச்சிறந்த நண்பர், மிக கலகலப்பானவர். வாணி போஜன் மிக எளிமையானவர், மிக அழகானவர் அவர் என் சகோதரி போல் அன்பு செலுத்தினார். அசோக் செல்வன் மிகமிக ஆதரவாக இருந்தார். ஒரு நண்பனாக எந்த ஈகோவும் இன்றி கூட இருந்தார். அவர் போல பெண்களுக்கு துணையாக ஆண்கள் உலகில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இந்தப்படம் ஒரு நல்ல அனுபவமாக இருக்கும் எல்லோரும் பார்த்து ரசியுங்கள் நன்றி.” என்று முடித்துக்கொண்டார்.

சென்னையில் கொரோனா உச்சம் தொட்டிருக்கும் நேரம். இந்த வேளையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் செய்திருக்கும் காரியம் அவரை நோக்கிக் கவனம் திரும்பச் செய்திருக்கிறது.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

தமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.

எமது அன்றாட சிக்கன போக்குவரத்து தேவைகளுக்கு பெரிதும் கைகொடுத்து உதவுவது மிதிவண்டிகள்.

இன்று ஜூன் 07ஆம் திகதி உலக உணவு பாதுகாப்பு நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது.

ஆடுகளம் படத்தின் மூலம் பிரபலமாகி, ‘ஹரிதாஸ்’ படத்தில் நடிப்பின் உச்சம் தொட்டு நின்ற எதார்த்தக் கலைஞன் நடிகர் கிஷோர்.

சென்ற 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருமண பந்தத்தில் இணைந்துகொண்ட ஆர்யா&சயீஷா காதல் ஜோடியின் திருமண நிகழ்வின் உத்தியோகபூர்வ வீடியோ சமீபத்தில் வெளியாகி உள்ளது.