கோடம்பாக்கம் Corner

சென்னை வட்டார வழக்கில் டகில் என்ற ஒரு வார்த்தை உள்ளது. டகில் என்றால் அள்ளி விடுவது என்று பொருள். விஜய்யின் சினிமா வாழ்க்கையில் பிகில் படம் 300 கோடி வசூலித்ததாக கூறப்பட்டது.

படத்துக்கான செலவு 150 கோடி என்றார் அதன் நிர்வாக தயாரிப்பாளர், ஏஜிஎஸ் நிறுவனத்தின் முதலாளி கல்பாத்தி அகோரம் மகளான அர்ச்சனா கல்பாத்தி. ஆனால் படம் உண்மையாக வசூலித்தது 125 கோடி மட்டுமே. போட்ட பணத்தில் 25 கோடி கையை கடிக்க அந்த பணத்தை தனது பைனான்சியர் அன்புச்செழியன் மூலமாக கொடுத்து விட்டாராம் விஜய்.

ஆனால் ட்விட்டர் குழுக்கள் மூலம் படத்துக்கு 300 கோடி வசூல் வந்ததாக எழுதச் சொன்னாராம் அர்ச்சனா கல்பாத்தி. இதை கவனித்த வருமானவரித்துறை கண்டிப்பாக இதில் கருப்பு பணம் புழங்கும் என்று கருதி விசாரணை செய்தது. ஆனால் விஜய்யிடம் இருந்து கைப்பற்ற முடியவில்லை. ஆனால் அன்புச்செழியன் இடமிருந்து கைப்பற்றப்பட்டது. அன்புச்செழியன் தமிழகத்தின் முக்கிய அரசியல் பிரமுகரின் பினாமி என்று கூறப்படுகிறது. இந்தப்படத்தை தமிழகம் முழுவதும் வாங்கி பினாமி வினியோகஸ்தர்கள் மூலம் வெளியிட்டது அன்புச்செழியன் தான் என்பது தெரியவந்துள்ளது.

125 கோடி வசூலான தொகையை 300 கோடி என்று காட்டுவதன் மூலம் அரசியலில் சம்பாதித்த கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் முயற்சி நடந்தது என்பதை வருமான வரித்துறை கண்டுபிடித்து விட்டது. ரஜினி படங்களிலும் இதே கருப்பு வெள்ளை விளையாட்டு தான் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் கமல் மட்டுமே தொடக்கம் முதலே இந்த கருப்பு வெள்ளை விளையாட்டுக்கு சம்மதிப்பதில்லை. அதனால்தான் அவரது படங்கள் 60 கோடி வசூலை தாண்டுவதில்லை.

தர்பார் வசூலில் 65 கோடி மட்டுமே கிடைத்ததால் அதை வாங்கிய வினியோகஸ்தர்கள் கருப்பை வெள்ளையாக்கும் நோக்கத்துடன் அன்புச்செழியன் தரப்பை அணுகியபோது தற்போது பணப்புழக்கம் இல்லை என்று கூறி விட்டதால் வேறு வழி இல்லாமல் ரஜினி இடமே திரும்பி வந்திருக்கிறார்கள். அதில்தான் சிக்கல் ஏற்பட்டது என்று சொல்கிறார்கள்.
ஆக பிகில் படத்துக்கு 300 கோடி என்று டகில் விட்டது விஜய்க்கும் அர்ச்சனா கல்பாத்திக்கும் திகில் அத்தியாயமாக மாறிவிட்டது என்கின்றன விசயமறித்த வட்டாரங்கள்.

நடிகர் சிம்புவுக்குத் திருமணம் எனும் செய்திகள் வெளியாகியதைத் தொடர்ந்து, பல இடங்களிலம் இது தொடர்பான பேச்சுக்கள்  இடம்பெற்று வருகின்றன. சிம்புவின் குடும்பத்தினர் வரையும் இந்தச் செய்திகள் சென்று சேர்ந்துள்ளன. 

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

தமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.

எமது அன்றாட சிக்கன போக்குவரத்து தேவைகளுக்கு பெரிதும் கைகொடுத்து உதவுவது மிதிவண்டிகள்.

இன்று ஜூன் 07ஆம் திகதி உலக உணவு பாதுகாப்பு நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது.

ஆடுகளம் படத்தின் மூலம் பிரபலமாகி, ‘ஹரிதாஸ்’ படத்தில் நடிப்பின் உச்சம் தொட்டு நின்ற எதார்த்தக் கலைஞன் நடிகர் கிஷோர்.

சென்ற 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருமண பந்தத்தில் இணைந்துகொண்ட ஆர்யா&சயீஷா காதல் ஜோடியின் திருமண நிகழ்வின் உத்தியோகபூர்வ வீடியோ சமீபத்தில் வெளியாகி உள்ளது.