கோடம்பாக்கம் Corner

சீன தேசத்தை ஒட்டுமொத்தமாக முடக்கியிருக்கிறது கரோனா வைரஸ். எங்கே தங்கள் நாடுகளில் கரோனோ தீண்டிவிடுமோ என உலக மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். ஜப்பான் கடல் எல்லைக்குள் நுழைந்த சீனக் கப்பலில் ஒருவருக்கு இருந்த கரோனா வைரஸ் அவருடன் பயணித்த 68 பேருக்கு பரவிவிட்டதால், அந்தக் கப்பலை நாட்டுக்குள் அனுமதிக்கவில்லை ஜப்பான்.

இப்படி எங்கும் பரபரப்பாக இருக்க, 9 நாட்களாக செவிலியப் பணியில் இருக்கும் தனது காதலியை கண்ணாடி ஜன்னலுக்கு இந்தப் பக்கம் இருந்து காதலர் கண்ணீருடன் முத்தமிடும் சீனக்காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. (வீடியோ இணைப்பு காண்க) இதுவரை 4012 பேரை கரோனோவிடமிருந்து காப்பாற்றியிருந்தாலும் 1018 பேரை காவு கொடுத்துவிட்டது சீனா.

இதுவொரு பக்கம் இருக்க, துணிந்து இதற்கு மருந்து கண்டறியவேண்டிய மருத்துவர்கள், இந்த வைரஸை கண்டு அச்சத்தில் உள்ளனர். இருந்தும் பலர் துணிந்து ஆராய்ச்சிகள் செய்து இதற்கு மருந்து கண்டுபிடிக்க முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் கரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்க தான் தயாராக இருப்பதாக உலகப்புகழ் பெற்ற ஆக்‌ஷன் மன்னன் ஜாக்கி சான் அறிவித்திருக்கிறார்.

அவரின் தனது சமூக வலைதளப் பதிவில் ‘அறிவியலும், தொழில்நுட்பமும் சேர்ந்துதான் இந்த வைரஸை வெற்றிகொள்ள முடியும். பலரும் இதே எண்ணத்தில் இருப்பீர்கள் என நம்புகிறேன். கரோனாவுக்கு விரைவில் மாற்று மருந்து கண்டுபிடிக்கப்படும் என உறுதியாக நம்புகிறேன். தனிப்பட்ட நபரோ அல்லது ஒரு குழுவோ இதற்கு மருந்து கண்டுபிடித்தால் ஒரு மில்லியன் யென் தொகையால் நன்றி சொல்ல விரும்புகிறேன்’ என அறிவித்திருக்கிறார்.

இவற்றையும் பார்வையிடுங்கள்

அட்டக்கத்தி தொடங்கி கபாலி வரை அட்டகாசமான மண்ணின் கதைகளைப் படமாகத் தந்தவர் பா.இரஞ்சித்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி தொற்று குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1 அன்று உலக சுகாதார நிறுவனத்தால் அனுசரிக்கப்படுகிறது.

சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்குரா, கௌதம்மேனன்,வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள தமிழ் ஆந்தாலஜி படம் “பாவகதைகள்”.