கோடம்பாக்கம் Corner

நடிகர்களின் உடற்பயிற்சி ஆலோசகராக இருந்து நெடுஞ்சாலை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஆரி.

தற்போது தனது பெயரை ஆரி அர்ஜுனா என்று மாற்றிக் கொண்டிருக்கிறார். பல சமூக பணிகளை செய்வதில் ஆர்வம் காட்டிவரும்இவருக்கு நயந்தாரா நடித்த மாயா படத்தின் மூலம் பிரேக் கிடைத்தது.  அதன்பின் ஆரிக்குச் சரியான படங்கள் அமையவில்லை. இதனால் ஒரு நல்ல வெற்றிக்காக போராடிக் கொண்டிருக்கிறார் பெயரைக் கெடுத்துக்கொள்ளாத இந்த திறமையான நடிகர்.

இன்று ஆரி அர்ஜுனாவுக்கு பிறந்தநாள். இதையொட்டி தனது புதிய படம் குறித்த அறிவிப்பை ஒரு வீடியோ மூலம் வெளியிட்டிருக்கிறார். இதில் பிக்பாஸ் புகழ் லொஸ்லியா, அபிராமி, சிருஷ்டி டாங்கே ஆகிய மூவரும் கதாநாயகியாக நடிக்கிறார்கள்.இப்படத்தை எழுதி இயக்குகிறார் ஆல்பர்ட் ராஜா.