கோடம்பாக்கம் Corner

ரசிகர்களை ஏமாற்றிய தொடரி படம் இயக்கிய பிரபுசாலமன்  இப்போது ராணா டகுபதியை வைத்து காடன்  படத்தை இயக்கியுள்ளார். இதில்  விஷ்ணு விஷால், புல்கிட் சாம்ராட், அஸ்வின் ராஜா, டின்னு  ஆனந்த் மற்றும் சோயா ஹீசைன் உள்ளிட்டோர் நடிதிருக்கிறார்கள்.

சாந்தனு  மொய்த்ரா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தியா மற்றும் தாய்லாந்து  காடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்தது.

தமிழ், தெலுங்கு  மற்றும் ஹிந்தி மொழிகளில்ரிலீஸாகவுள்ள  இப்படம் யானை பாகனின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டதாகும். விலங்குகளுக்கும், மனிதருக்கும்  உள்ள உறவை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது.

இப்படத்தின் ஹிந்தி பதிப்பில் புல்கித் சாம்ராட், ஷ்ரியா பில்காங்கர்  உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கின்றனர். இதில் சுவாரசியமான  விஷயம் என்னவெனில், மூன்று மொழிகளிலும் ரானா டகுபதி 50 வயது உடைய  நபராக தோற்றமளிக்கிறார். கும்கி யானைக் கையாளும் பாகனாக வருகிறார்.

இந்த படம் வெளியாகும் வரும் ஏப்ரல் 2ம் தேதி வெளியாகும் நிலையில் இப்படத்தின் முன்னோட்டம் இன்று வெளியானது.