கோடம்பாக்கம் Corner

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை எந்த படத்துக்கு எதிராக விமர்சனங்கள் அல்லது சர்ச்சைகள் வந்தால், பின்னாளில் அதுவே அந்த படத்துக்கு இலவச விளம்பரம் ஆகி, படம் கன்னா பின்னாவென கல்லா கட்டுவது வாடிக்கையாகி போய்விட்டது.

ஆனலும் இதற்கு மெர்சல், சர்கார் என விஜய் படங்களை உதாரணமாகக் காட்டலாம். அந்த வகையில் மாஸ்டர் படத்துக்கும் தற்போதே வானளவு எதிர்பார்ப்பை உருவாக்கிவிட்டார்கள்.

ரைடு, செல்பி என்று ரசிகர்கள் மத்தியில் இப்படியொரு எதிர்பார்ப்பு நிலவினால் இப்படத்தின் வியாபாரம் மட்டும் அசத்தாமல் இருக்குமா என்ன? தமிழோ இந்தியோ முன்னணி நடிகரின் படம் என்றாலும்கூட அந்த படத்தின் வெளியீடு நெருங்கும்போதுதான் வியாபாரம் சூடுபிடிக்கும். ஆனால் இன்னும் படப்பிடிப்பு கூட முடியாத நிலையில் மாஸ்டர் படத்தின் ஒட்டுமொத்த ஏரியாவும் வியாபாரமாகி விட்டதாம்.

இன்று வந்த தகவல்படி இதன் தமிழக உரிமம் 68 கோடிக்கும் கேரள வெளியீட்டு உரிமம் ஆறு கோடியே 25 லட்சத்துக்கும் கர்நாடக வெளியீட்டு உரிமம் எட்டு கோடியே 65 லட்சத்துக்கும் தெலுங்கு மொழிமாற்று உரிமம் ஒன்பது கோடிக்கும் விற்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

இதுபோக இப்படத்தின் வெளிநாட்டு திரையரங்க உரிமம் 29 கோடியே 50 லட்சத்துக்கும் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமம் 50 கோடிக்கும் ஆடியோ உரிமம் நான்கு கோடியே 50 லட்சத்துக்கும் வியாபாரமாகியிருக்கிறதாம். இப்படி அத்தனை உரிமைகளும் விற்பனையாகிவிட்ட நிலையில் மாஸ்டர் படத்தின் இந்தி மொழிமாற்று உரிமம் மட்டும் இன்னும் விற்பனையாகாமல் உள்ளது. இப்போதைக்கு வட இந்தியாவில் பிகில் படத்தின் வசூல் மற்றும் வியாபாரத்தை அடிப்படையாகக் கொண்டு அதுவும் 23 கோடி வரை வியாபாரம் ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில், இன்னும் படப்பிடிப்பே முடியாத நிலையில் , ஒட்டு மொத்தமாக ரிலிஸுக்கு முன்பே 200 கோடி வரை வியாபாரமாகி இருப்பதாக திரை வட்டாரத்தில் உறுதி செய்யப்படுகிறது.

விஜய்யைத் தாண்டி மாஸ்டர் படத்துக்கு எதிர்பார்ப்பு உருவாக இன்னொரு காரணம் விஜய் சேதுபதி. விஜய்யும் விஜய் சேதுபதியும் ஒரே படத்தில் இணைந்து நடிக்க போகிறார்கள் என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டதும் மாஸ்டர் படம் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு உயர்ந்தது

இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் பிஸி நடிகர் விஜய் சேதுபதி. விஜய் படத்துக்காக தன்னுடைய கால்ஷீட்டை குளுறுபடி இல்லாமல்  ஒதுக்கி கொடுத்ததே இன்று பலருக்கும் ஆச்சரியமாக உள்ளது. தற்போது நெய்வேலி நில சுரங்கத்தில் நடக்கும் படப்பிடிப்பில் விஜய், விஜய் சேதுபதி பங்கேற்கும் சண்டைக் காட்சிகளைதான் படக்குழு படமாக்கி வருகின்றனர். அதனால்தான் சோதனை முடிந்த கையோடு விஜய்சேதுபதியின் கால்ஷீட்டை வீணடிக்க விரும்பாமல் உடனடியாக படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார் விஜய்.

இவர்களுடைய காம்பினேஷன் காட்சிகளுடன் இப்படத்தின் பெரும்வாரியான படப்பிடிப்பு முடிவுக்கு வருகிறது. இதனால் திட்டமிட்டப்படி இப்படம் ஏப்ரல் 9-ம் தேதி ‘மாஸ்டர்’ படம் திரைக்கு வருவது உறுதி என்கின்றனர் படக்குழுவினர். ஐ.டி.ரெய்டுக்கு பிறகு வெளி வரும் விஜய் படம், விஜய் – விஜய் சேதுபதி முதல்முறையாக இணையும் திரைப் படம் என்பதால் மாஸ்டர் படம் வசூலில் புதிய சரித்திரத்தை உருவாக்கும் என தற்போதே பாக்ஸ் ஆபீஸில் வல்லுநர்கள் உத்தேச வசூல் கணக்கைத் தொடங்கிவிட்டார்கள். மாஸ்டர் பட வியாபார விபரம்!

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை எந்த படத்துக்கு எதிராக விமர்சனங்கள் அல்லது சர்ச்சைகள் வந்தால், பின்னாளில் அதுவே அந்த படத்துக்கு இலவச விளம்பரம் ஆகி, படம் கன்னா பின்னாவென கல்லா கட்டுவது வாடிக்கையாகி போய்விட்டது. ஆனலும் இதற்கு மெர்சல், சர்கார் என விஜய் படங்களை உதாரணமாகக் காட்டலாம். அந்த வகையில் மாஸ்டர் படத்துக்கும் தற்போதே வானளவு எதிர்பார்ப்பை உருவாக்கிவிட்டார்கள்.

ரைடு, செல்பி என்று ரசிகர்கள் மத்தியில் இப்படியொரு எதிர்பார்ப்பு நிலவினால் இப்படத்தின் வியாபாரம் மட்டும் அசத்தாமல் இருக்குமா என்ன? தமிழோ இந்தியோ முன்னணி நடிகரின் படம் என்றாலும்கூட அந்த படத்தின் வெளியீடு நெருங்கும்போதுதான் வியாபாரம் சூடுபிடிக்கும். ஆனால் இன்னும் படப்பிடிப்பு கூட முடியாத நிலையில் மாஸ்டர் படத்தின் ஒட்டுமொத்த ஏரியாவும் வியாபாரமாகி விட்டதாம்.

இன்று வந்த தகவல்படி இதன் தமிழக உரிமம் 68 கோடிக்கும் கேரள வெளியீட்டு உரிமம் ஆறு கோடியே 25 லட்சத்துக்கும் கர்நாடக வெளியீட்டு உரிமம் எட்டு கோடியே 65 லட்சத்துக்கும் தெலுங்கு மொழிமாற்று உரிமம் ஒன்பது கோடிக்கும் விற்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

இதுபோக இப்படத்தின் வெளிநாட்டு திரையரங்க உரிமம் 29 கோடியே 50 லட்சத்துக்கும் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமம் 50 கோடிக்கும் ஆடியோ உரிமம் நான்கு கோடியே 50 லட்சத்துக்கும் வியாபாரமாகியிருக்கிறதாம். இப்படி அத்தனை உரிமைகளும் விற்பனையாகிவிட்ட நிலையில் மாஸ்டர் படத்தின் இந்தி மொழிமாற்று உரிமம் மட்டும் இன்னும் விற்பனையாகாமல் உள்ளது. இப்போதைக்கு வட இந்தியாவில் பிகில் படத்தின் வசூல் மற்றும் வியாபாரத்தை அடிப்படையாகக் கொண்டு அதுவும் 23 கோடி வரை வியாபாரம் ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில், இன்னும் படப்பிடிப்பே முடியாத நிலையில் , ஒட்டு மொத்தமாக ரிலிஸுக்கு முன்பே 200 கோடி வரை வியாபாரமாகி இருப்பதாக திரை வட்டாரத்தில் உறுதி செய்யப்படுகிறது.

விஜய்யைத் தாண்டி மாஸ்டர் படத்துக்கு எதிர்பார்ப்பு உருவாக இன்னொரு காரணம் விஜய் சேதுபதி. விஜய்யும் விஜய் சேதுபதியும் ஒரே படத்தில் இணைந்து நடிக்க போகிறார்கள் என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டதும் மாஸ்டர் படம் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு உயர்ந்தது

இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் பிஸி நடிகர் விஜய் சேதுபதி. விஜய் படத்துக்காக தன்னுடைய கால்ஷீட்டை குளுறுபடி இல்லாமல்  ஒதுக்கி கொடுத்ததே இன்று பலருக்கும் ஆச்சரியமாக உள்ளது. தற்போது நெய்வேலி நில சுரங்கத்தில் நடக்கும் படப்பிடிப்பில் விஜய், விஜய் சேதுபதி பங்கேற்கும் சண்டைக் காட்சிகளைதான் படக்குழு படமாக்கி வருகின்றனர். அதனால்தான் சோதனை முடிந்த கையோடு விஜய்சேதுபதியின் கால்ஷீட்டை வீணடிக்க விரும்பாமல் உடனடியாக படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார் விஜய்.

இவர்களுடைய காம்பினேஷன் காட்சிகளுடன் இப்படத்தின் பெரும்வாரியான படப்பிடிப்பு முடிவுக்கு வருகிறது. இதனால் திட்டமிட்டப்படி இப்படம் ஏப்ரல் 9-ம் தேதி ‘மாஸ்டர்’ படம் திரைக்கு வருவது உறுதி என்கின்றனர் படக்குழுவினர். ஐ.டி.ரெய்டுக்கு பிறகு வெளி வரும் விஜய் படம், விஜய் – விஜய் சேதுபதி முதல்முறையாக இணையும் திரைப் படம் என்பதால் மாஸ்டர் படம் வசூலில் புதிய சரித்திரத்தை உருவாக்கும் என தற்போதே பாக்ஸ் ஆபீஸில் வல்லுநர்கள் உத்தேச வசூல் கணக்கைத் தொடங்கிவிட்டார்கள்.

இவற்றையும் பார்வையிடுங்கள்

அட்டக்கத்தி தொடங்கி கபாலி வரை அட்டகாசமான மண்ணின் கதைகளைப் படமாகத் தந்தவர் பா.இரஞ்சித்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி தொற்று குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1 அன்று உலக சுகாதார நிறுவனத்தால் அனுசரிக்கப்படுகிறது.

சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்குரா, கௌதம்மேனன்,வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள தமிழ் ஆந்தாலஜி படம் “பாவகதைகள்”.