கோடம்பாக்கம் Corner

அதிகப்பிரசங்கி படங்களை எடுத்து, விமர்சகர்களின் கண்டனத்துக்கு தொடர்ந்து ஆளாகி வந்தவர் ஆதிக் ரவிச்சந்திரன்.

இவரது திரிஷா இல்லனா நயன்தாரா படத்துக்கு எந்த அளவுக்கு எதிர்ப்பு இருந்ததோ அதே அளவுக்கு இளைஞர்கள் மத்தியில் வரவேற்பும் இருந்தது. அடுத்து சிம்புவை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தின் மூலம் தனது ஏடாகூடமான கோலிவுட் முகவரியையும் தொலைத்தார். தொலைத்த இடத்தில்தானே தேடமுடியும்.. அதனால் தற்போது  பிரபுதேவாவை வைத்து  ‘பஹிரா’ என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார்.

 காதலர் தினத்தன்று இப்படத்தின் முதல் தோற்ற வரைகலையை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்தப் படம், ஷங்கர் இயக்கத்தில் பிரபுதேவா நடித்த காதலன் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்று ஆதிக் ரவிச்சந்திரனின் உதவியாளர்கள் தெரிவிக்கின்றனார். இந்தப் படத்தில் சுமார் 18 நிமிடம் வரும் ப்ளாஷ்பேக் காட்சிகளில் மொட்டையடித்த தலை, நெற்றிக்கண் போன்ற ஒரு சக்தி கொண்ட தோற்றத்துடன் பிரபுதேவா வர இருக்கிறாராம். பிரபுதேவாவின் தோற்றத்தை வெளிப்படுத்தும் இந்த முதல்தோற்ற வரைகலை இணையத்தில் பரபரப்பாக கவனம் பெற்று வருகிறது.

இவற்றையும் பார்வையிடுங்கள்

அட்டக்கத்தி தொடங்கி கபாலி வரை அட்டகாசமான மண்ணின் கதைகளைப் படமாகத் தந்தவர் பா.இரஞ்சித்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி தொற்று குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1 அன்று உலக சுகாதார நிறுவனத்தால் அனுசரிக்கப்படுகிறது.

சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்குரா, கௌதம்மேனன்,வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள தமிழ் ஆந்தாலஜி படம் “பாவகதைகள்”.