கோடம்பாக்கம் Corner

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சர்ச்சைக்குரிய விஷயங்களில் பதட்டமோ உணர்ச்சிவசமோ இல்லாமல் அமைதியாகவே பதில் கொடுப்பார். அதிகம் சர்ச்சைகளில் சிக்காத ரஹ்மானுக்கு, கடந்த ஆண்டு மும்பையில் 'ஸ்லம்டாக் மில்லினர்' படத்தின் பத்தாம் ஆண்டு விழாவில் சங்கடம் நேர்ந்தது.

அந்நிகழ்ச்சியில் ரஹ்மானின் மகள் கதிஜாவும் பங்கேற்றார். அந்த மேடையில் தனது அப்பாவுடன் ஒரு உரையாடலையும் நடத்தினார். அப்போது கதிஜா அணிந்து வந்த பர்தா ஆடை விவாதத்தை உருவாக்கியது

'ரஹ்மான் பிற்போக்குத்தனமாக நடந்து கொண்டுள்ளார்'என நெட்டிசன்களில் பலர் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்தனர். பின்னர் அது பேசுபொருளாகவும் மாறியது. இதையடுத்து ரஹ்மானின் மகள், “நான் எந்த உடையை அணிய வேண்டும் என்பது எனது தனிப்பட்ட விருப்பம். எனது தேர்வுக்கும் விருப்பத்திற்கும் எனது பெற்றோர்கள் பொறுப்பாக முடியாது” என்று நெத்தியடியாக கருத்துக் கூறியிருந்தார். அதன்பின் அந்தச் சர்ச்சை அடங்கியது.

ஆனால் தற்போது இந்த ஆடை விவகாரம் மீண்டும் தலை தூக்கியிருக்கிறது. இது தொடர்பாக பெண்ணியவாதியும் சர்ச்சைக்குரிய எழுத்தாளருமான தஸ்லீமா நஸ்ரின், "நான் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையை பெரிதும் விரும்புகிறேன். ஆனால் அவரது அன்பான மகளை பார்க்கும்போதெல்லாம் எனக்கு மூச்சுத் திணறல் வந்துவிடுகிறது. ஒரு கலாச்சார குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, படித்த பெண்களைக்கூட மிக எளிதாக மூளைச்சலவை செய்ய முடியும் என்பதை அறிந்துக் கொள்வது மிகவும் வருத்தமளிக்கிறது" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். அதற்குப் பலரும் தங்களின் கருத்துகளை பின்னூட்டமாக எழுதி வருகின்றனர்.

மீண்டும் தஸ்லீமா தேடி வந்து தாக்குவதில் கடுப்பான ரஹ்மானின் மகள் கதிஜா, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவை ஒன்றைப் போட்டுள்ளார். அதில் அவர், "ஒரு வருடத்திற்குப் பின்பாக மீண்டும் இந்தப் பிரச்சனை சுற்ற ஆரம்பித்துள்ளது. இந்த நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் நடக்கின்றன. ஆனால் அனைத்து மக்களும் ஒரு பெண் அணிய விரும்பும் துண்டு உடை குறித்து கவனம் செலுத்துகிறார்கள். ஒவ்வொரு முறையும் இந்தப் பிரச்சனை எனக்குள் தீயை உண்டாக்குகிறது. நிறைய விஷயங்களைச் சொல்ல விரும்புகிறது. என்னுடைய வாழ்க்கையில் நான் எடுத்த முடிவுகளை எண்ணி பலவீனமடையவோ வருத்தப்படவோ மாட்டேன். நான் என்ன செய்கிறேன் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன், பெருமிதம் கொள்கிறேன், என்னைப் போலவே என்னை ஏற்றுக்கொண்டவர்களுக்கும் நன்றி. நான் மேலும் இதுபற்றி சொல்ல விரும்பவில்லை" என்று மிக நீண்ட விளக்கத்தைத் தந்திருக்கிறார்.

மேலும் தனது பதிவில் எழுத்தாளர் தஸ்லீமாவுக்கு நேரடியாக பதில் அளிக்கும் விதமாக "அன்புள்ள தஸ்லிமா நஸ்ரின், என்னுடைய ஆடையால் உங்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதற்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள். எனது உடையால் எனக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதில்லை. அதற்குப் பதிலாக நான் ஏற்றுக் கொண்ட விஷயத்தில் பெருமையாகவும் உறுதியாகவும் உணர்கிறேன்" என்று தனது தரப்பை தன்னம்பிக்கையுடன் நியாயப்படுத்தியிருக்கிறார்.

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

அட்டக்கத்தி தொடங்கி கபாலி வரை அட்டகாசமான மண்ணின் கதைகளைப் படமாகத் தந்தவர் பா.இரஞ்சித்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி தொற்று குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1 அன்று உலக சுகாதார நிறுவனத்தால் அனுசரிக்கப்படுகிறது.

சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்குரா, கௌதம்மேனன்,வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள தமிழ் ஆந்தாலஜி படம் “பாவகதைகள்”.