கோடம்பாக்கம் Corner

திரையுலகப் பின்னணி ஏதுமின்றி தனது சொந்தத் திறமையால் திரையுலகில் நுழைந்தவர் சிவகார்த்திகேயன்.

அவரது வளர்ச்சியை விரும்பாத பலரும் அவரை எப்படியாவது சாய்த்துவிட நினைத்தார்கள். ஆனால் தனக்கு எதிரான சதிகளை எல்லாம் சுருட்டி பேண்டின் உள்பாக்கெட்டில் போட்டுக் கொண்டு தொடர்ந்து உழைப்பால் உயர்ந்த நவீன கால  கோலிவுட் இளவரசன் சிவகார்த்திகேயனுக்கு இன்று பிறந்தநாள்.

சிவகார்த்திகேயன் தன் வாழ்க்கையை ஓட்டுவதற்காக கிடைத்த வாய்ப்புகளில் ஒன்றான விஜய் தொலைக்காட்சியின் தனிநபர் நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றில், கலந்து கொண்டு தனது காமெடி திறமைகளையும், பன்ச் வசனங்களையும் பேசி அனைவரின் மனதிலும் இடம் பெற்றவர்.

இவரின் திறமையை அறிந்து, இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்பை அளித்தது அந்த தொலைக்காட்சி. அப்படியான ஒரு சூழலில் ஒரு சின்னத்திரை நிகழ்ச்சிக்கு வந்த தனுஷ் மூலம் கிடைத்த வாய்ப்பைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு தன் கடுமையான உழைப்பால், திரைத்துறையில் தனி அடையாளம் பெற முயன்றார்.

இயக்குநர் பண்டிராஜின் இயக்கத்தில் 2012-ஆம் வெளிவந்த மெரினா, இவர் நடிப்பில் வெளியான முதல் படம். அதே ஆண்டு, நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான படம் 3. இதில், நடிகர் தனுஷ் சிவகார்த்திகேயனின் திறமையை அறிந்து, எதிர்நீச்சல் படத்திற்கான வாய்ப்பையும் அவருக்கு அளித்தார்.இதில் எதிர் நீச்சல் படம் வெற்றிப் பெறவே, அவரின் வெற்றி பயணமும் தொடங்கியது. சிறியவர்கள் முதல், பெரியவர்கள் வரை அனைவரும் மனதிலும் இடம் பிடித்தார். தொடர்ந்து ஹிட் படங்களைக் கொடுக்க சிவகார்த்திகேயன் மந்திரவாதி அல்லவே..

இவரின் சில படங்கள், எதிர்பார்த்த அளவிற்கு போகவில்லைதான். அந்த கால பாகவதர் தொடங்கி, எம்,ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் யாருமே தொடர் வெற்றியும் கொடுத்ததில்லை.. தொடர் தோல்வியும் கொடுத்ததில்லை. இதை மனதில் கொண்டு தன் விட முயற்சியோடு, வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டு இருக்கும் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராகவும் அவதாரமெடுத்து முத்திரை பதித்துவருகிறார்.

மொத்தத்தில் பல்வேறு தடைகளை தாண்டி இன்றைய நிலையில் இளம் ரசிகர்களின் சூப்பர் ஹீரோவாக  கோலிவுட் கொண்டாடி வருகிறது. இன்று தனது ‘டாக்டர்’ படத்தின் முதல் தோற்றத்தையும் தனது ரசிகர்களுக்கான தனது பிறந்தநாள் பரிசாக வெளியிட்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

இவற்றையும் பார்வையிடுங்கள்

அட்டக்கத்தி தொடங்கி கபாலி வரை அட்டகாசமான மண்ணின் கதைகளைப் படமாகத் தந்தவர் பா.இரஞ்சித்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி தொற்று குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1 அன்று உலக சுகாதார நிறுவனத்தால் அனுசரிக்கப்படுகிறது.

சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்குரா, கௌதம்மேனன்,வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள தமிழ் ஆந்தாலஜி படம் “பாவகதைகள்”.