கோடம்பாக்கம் Corner

ரஜினி நடிப்பில் வெளியாகி அவருக்கு மாபெரும் வெற்றியை கொடுத்த படங்களில் ஒன்று நெற்றிக்கண். இந்தப் படத்துக்கு கதை திரைக்கதை வசனம் எழுதியவர் இயக்குநர் விசு.தற்போது சிறுநீரக செயலிழப்பால் அவதிப்பட்டு வருகிறார். வாரத்தில் மூன்று நாட்கள் டயாலிசிஸ் செய்து உயிர் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் அவர் திரைக்கதை வசனம் எழுதிய கதை வசனம் எழுதி பாலச்சந்தர் இயக்கிய தில்லு முல்லு திரைப்படம் சந்தானம் நடிப்பில் கண்ணா லட்டு தின்ன ஆசையா படமாக தமிழில் மீண்டும் ரீமேக் செய்யப்பட்டது. அதன் நெகட்டிவ் ரைட்ஸ் வைத்துள்ள பாலச்சந்தரின் மகள் புஷ்பா கந்தசாமி கதாசிரியர் என்ற முறையில் விசுவிடம் ஒரு வார்த்தை கூட கேட்காமல் அதன் உரிமையை விற்றுவிட்டார். அப்போதே இது பிரச்சனையானது.

தற்போது பழைய குருடி கதவை திறடி எனும் விதமாக நெற்றிக்கண் விஷயத்திலும் இந்தப் பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது. தற்போது தில்லுமுல்லு போலவே நெற்றிக்கண் படமும் ரீமேக் ஆகிறது. அதை ரீமேக்  செய்து நடிப்பதற்காக அதன் உரிமையை தனுஷ் பெற்றுள்ளார். அதற்கான வேலைகளும் தொடங்கி விட்டன. இந்நிலையில் விசு ஒரு பரபரப்பான வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் “ ரஜினி போலவே நெற்றிக்கண் படம் உங்களுக்கும் ஒரு மைல்கல்லாக அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன். அந்தப் படத்தின் கதை திரைக்கதை வசனத்தை எழுதியவன் நான்தான். எனக்குத் தெரியாமல் பட உரிமையை நீங்கள் எப்படி வாங்கினீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள் ஒருவேளை படத்தின் வேலைகளைத் தொடங்கி, அதன்மீது நான் கதை உரிமைக்காக வழக்கு தொடர்ந்தால், ‘என்ன விசு சார் இப்படி பண்ணிட்டாரே!’ என்று என் மீது வருத்தப் பட வேண்டாம்” என்று அந்த வீடியோவில் விசு பகீரங்கமாக கூறியிருக்கிறார்.

இதன் மூலம், நெற்றிக்கண் படத்தின் கதை உரிமையை தனக்கே உரியது என்று அவர் தெரிவித்திருக்கிறார். தமிழ் மறுபக்கத்தில் தனுஷ் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். நெகட்டீவ் உரிமை வைத்திருந்தால் அந்த படத்தின் கதையை உரிமையும் தன்னுடையது தான் என்று நினைக்கும் அபத்தம் தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் பிரச்சனை ரஜினி ரஜினி கவனத்திற்கு இந்நேரம் வந்திருக்கும். ஆனால் அவர் எப்போதும் போல் மௌன சாமியாராக மாறிவிடுவார். ரஜினி, விசுவைக் கண்டுகொள்வாரா என்பது இனிமேல்தான் தெரியவரும் என்றாலும், ரஜினிக்கும் தனுஷுக்கும் நெற்றிக்கண் ரீமேக் விவகாராம் பெரும் விக்கலாக மாறிவிட்டது மட்டும் உண்மை.

இவற்றையும் பார்வையிடுங்கள்

அட்டக்கத்தி தொடங்கி கபாலி வரை அட்டகாசமான மண்ணின் கதைகளைப் படமாகத் தந்தவர் பா.இரஞ்சித்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி தொற்று குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1 அன்று உலக சுகாதார நிறுவனத்தால் அனுசரிக்கப்படுகிறது.

சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்குரா, கௌதம்மேனன்,வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள தமிழ் ஆந்தாலஜி படம் “பாவகதைகள்”.