கமல் - ஷங்கர் கூட்டணியில் இந்தியன் 2 தொடங்கியதில் இருந்தே பிரச்சினைகள்தான். கோலிவுட்டையே திரும்பிப் பார்க்க வைத்த லைக்கா புரடக்ஷனுக்கு கட்டம் மட்டுமில்லை வட்டம், சதுரம், லக்கினம் எதுவும் சரியில்லை போலிருக்கிறது. இத்தனைக்கும் லைக்கா சுபாஷ்கரன் மிகுந்த கருணை உள்ளம் படைத்தவர்.
அடுத்தடுத்து தொடர் தோல்விப் படங்களைக் கொடுத்து வரும் லைக்கா இந்த படத்தை எடுத்த முதல் கட்டப் படப்பிடிப்பே பிரேக் ஆனது. கடந்த 98ம் வருஷம் ஜனவரி மூன்றாவது வாரத்தில் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது. ஆனால் சில நாட்கள் கூட அது தொடரவில்லை. காரணம் கமலுக்கான ‘இந்தியன் தாத்தா’ கெட்-அப் மேக்-அப்பில் ஷங்கருக்கு திருப்தியில்லை, அதனால் ..மேக் - அப் டீமை மாற்றுவதற்காக சின்ன பிரேக்! என்றார்கள்.
சில நாட்கள் முடிந்த பின்னும் ஷூட் துவங்கவில்லை. கேட்டால் ‘புது மேக் - அப் மெட்டீரியலால் கமல்ஹாசனுக்கு முகத்தில் அலர்ஜி வருகிறது. எனவே மாற்று யோசனையில் இருக்கிறோம்!’ என்றார்கள்.
இப்படி இழுத்துக் கொண்டு போனதில் நாடாளுமன்ற தேர்தல் வைப்ரேஷன் துவங்கிட, கமல்ஹாசனும் தேர்தல் பணிகளில் மூழ்கிவிடார். பொது நிகழ்ச்சிகள், வேட்பாளர் தேர்வு என்று போய்க் கொண்டிருந்த கமல் ‘நானும் இந்த தேர்தலில் போட்டியிட போகிறேன்!’ என்று நெத்தியடியாய் அறிவிச்சதில் ஷங்கரை விட லைக்கா ஷாக் ஆயிடுச்சு..
அதனால் பல கோடி ஆரம்ப முதலீடு போட்டது போனாலும் பரவாயில்லை என்றெண்ணி இந்த இந்திய 2 படத்தையை கை விட முடிவு செஞ்சிடுச்சு. இந்த படத்திற்கு ஷங்கர் சொன்ன பட்ஜெட் கட்டுப்படி ஆகாததால் இந்த படத்தை தயாரித்து வந்த லைகா நிறுவனம் பாதியிலேயே இந்த படத்தை கைவிட்டுவிட்டனர் என்று தகவல் இந்த வந்தது.
ஏற்கனவே கமல் நடித்த பல்ராம் நாயுடு திரைப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். அதே போல இந்தியன் 2 படம் கமலின் கடைசி படம் 2 கூறப்படுவதால் இந்த படமும் தடைபட்டு போய்விட்டதே என்று கமல் அப்செட் ஆனதால் விஜய் டி வி எக்ஸ் நிர்வாகி மகேந்திரன் தலையிட்டு வேறு சில ரூட்டில் ஃபைனான்ஸ் ரெடி பண்ணி லைகா பேனரிலேயே ஷூட் நடத்த ஆர்வப்பட்டு இப்போதைய படப்படிப்பு தொடங்கியது.
இந்த ஷெட்யூலில் சென்னை கோட்டை மாதிரியான செட்டில் இந்தியன் தாத்தா நுழைந்து விரல் வித்தைக் காட்டுவது போல் படமாக்க திட்டமிட்டிருந்த நிலயில் நான்குபேர் பலியாகி இருக்கிறார்கள். இவ்வளவு இடையூறுகளின் பின்னும் இந்தியன் 2 ஐத் தொடர்வதா வேண்டாமா என லைக்கா யோசிக்கும் என்கிறார்கள் மூத்த பத்திரிகையாளர்கள்.