கோடம்பாக்கம் Corner

கோலிவுட் ஏகப்பட்ட தயாரிப்பாளர்கள் கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்து படத்தை தயாரிக்கிறார்கள். அந்தப் படத்தை விளம்பரப்படுத்த இசை வெளியிட்டு விழா பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடத்துகின்றனர்.

ஆனால் அது மாதிரியான சினிமா விளம்பர நிகழ்ச்சிகளுக்கு படத்தில் நடிக்கும் பிரபல நடிகர், நடிகைகள் வருவதில்லை என்று இப்பவும் தயாரிப்பாளர்கள் தரப்பில் குற்றச்சாட்டு சொல்லப்பட்டு வருவது வாடிக்கையாகிவிட்டது.

இத்தனைக்கும் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களான ரஜினி, விஜய், சூர்யா ஆகியோர் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களிடம் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதே சமயம் நடிகர் அஜீத்தோ இது போன்ற நிகழ்ச்சிக்கு தம்மை அழைக்க வேண்டாம் என்று கூறிவிடுவதால் அவருடைய படத்திற்கு இசைவெளியீட்டு விழாவே கடந்த 10 ஆண்டுகளாக நடைபெறவில்லை.

அதேபோன்று நயன்தாராவும் தான் நடிக்கும் படங்களின் நிகழ்ச்சியில் பங்கேற்பதை தவிர்த்து வருகிறார். ரஜினி நடித்த தர்பார், விஜய் நடித்த பிகில் உள்ளிட்ட படங்களின் இசை வெளியீட்டு விழாவில் நயன்தாரா பங்கேற்காததும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்று சென்னை சத்யம் திரையரங்கில் த்ரிஷா கதையின் நாயகியாக நடித்துள்ள பரமபதம் விளையாட்டு படத்தின் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. இதில், த்ரிஷா கலந்து கொள்ளவில்லை. இதனால் நிகழ்ச்சிக்கு வந்த மற்ற பிரபலங்கள் த்ரிஷாவுக்கு கண்டனம் தெரிவித்தார்கள்.

‘த்ரிஷா பட விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாததால் அவர் சம்பளத்தில் ஒரு பகுதியை திருப்பித் தந்துவிடுவதே சரி’ என்று தயாரிப்பாளர் சிவா பேசினார்.

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

அட்டக்கத்தி தொடங்கி கபாலி வரை அட்டகாசமான மண்ணின் கதைகளைப் படமாகத் தந்தவர் பா.இரஞ்சித்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி தொற்று குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1 அன்று உலக சுகாதார நிறுவனத்தால் அனுசரிக்கப்படுகிறது.

சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்குரா, கௌதம்மேனன்,வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள தமிழ் ஆந்தாலஜி படம் “பாவகதைகள்”.