கோடம்பாக்கம் Corner

துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி வந்த சைக்கோ புகழ் மிஷ்கினுக்கும் விஷாலுக்கும் முட்டிக்கொண்டுவிட்டது. மிஷ்கின் விஷாலுக்கு 14 அம்சங்களை பட்டியலிட்டு எழுதிய கடிதம் ஒன்று விஷாலின் அலுவலகத்தில், பெரும் புயலைக் கிளப்பியிருப்பதாகத் தெரிகிறது.

அதில் மிஷ்கின் தான் அண்மையில் இயக்கிய சைக்கோ மிகப்பெரிய வெற்றிபெற்றதால் தன் சம்பளம் முன்னரே பேசியதில் இருந்து 35 விழுக்காடு அதிகரித்து தரவேண்டும். வெளிநாட்டு லெகேசன்களின் தான் விருப்படும் நட்சத்திர விடுதியில் தான் விரும்பும் அறை எண் கொண்ட அறையைத்தான் புக் செய்ய வேண்டும்.

இனி தயாரிப்பு, ஷெட்யூலிங் போன்ற சமாச்சாரங்களை போனிலே,நேரிலோ ஆலோசனை செய்யமாட்டேன். மெயில் மூலமே கேட்டு அறிந்து கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்ச அமசங்கள் கொண்ட அந்தக் கடிதம் விரைவில் ஊடகங்களின் கைக்கு வந்தாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை என்கிறார்கள்.

இந்த 14 அம்ச கடிதத்தை பார்த்த விஷால் மனதில் பாரம் அதிகரித்து துப்பறிவாளன் 2 படத்தின் எஞ்சிய பகுதியை தானே இயக்கிவிடுவது என்று முடிவெடுத்திருக்கிறாராம். ஆனால் மிஷ்கினோ ‘பாரம்’ படத்தின் சுவரொட்டிகளை ஊர் ஊராகப்போய் ஒட்டிக்கொண்டிருக்கிறார்.

இவற்றையும் பார்வையிடுங்கள்

அட்டக்கத்தி தொடங்கி கபாலி வரை அட்டகாசமான மண்ணின் கதைகளைப் படமாகத் தந்தவர் பா.இரஞ்சித்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி தொற்று குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1 அன்று உலக சுகாதார நிறுவனத்தால் அனுசரிக்கப்படுகிறது.

சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்குரா, கௌதம்மேனன்,வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள தமிழ் ஆந்தாலஜி படம் “பாவகதைகள்”.