தெலுங்கு திரையுலகில் துணை நடிகையாக இருந்து வரும் கராத்தே கல்யாணி மற்றும் நடன இயக்குநர் ராகேஷ் ஆகிய இருவரும் பொது வெளியிலும், சமூக வலைதளங்களிலும் தன்னைக் குறித்து கடந்த 2 ஆண்டுகளாக அவதூறாகவும், மிகவும் கீழ்த்தனமாகவும் வதந்திகளை பரப்பி வருவதாக நடிகை, ‘மீ டூ ’ புகழ் ஸ்ரீரெட்டி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
சமூக வலைதளங்களில் தன்னை குறித்து கீழ்த்தனமாகவும், அவதூறாகவும் வதந்திகளை பரப்பிவருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நடிகை ஸ்ரீரெட்டி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த நடிகை ஸ்ரீரெட்டி,தன்னை பற்றி அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய குற்றப்பிரிவில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் “தெலுங்கு திரையுலகில் துணை நடிகையாக இருந்து வரும் கராத்தே கல்யாணி மற்றும் நடன இயக்குநர் ராகேஷ் ஆகிய இருவரும் பொது வெளியிலும், சமூக வலைதளங்களிலும் தன்னைக் குறித்து கடந்த 2 ஆண்டுகளாக அவதூறாகவும், மிகவும் கீழ்த்தனமாகவும் வதந்திகளை பரப்பி வருவதாக குற்றம் சாட்டினார்.
மேலும், தனக்கு உள்ள ஆண் நண்பர்கள் குறித்தும், அவர்களுடன் தான் பழகும் விதம் குறித்தும் கொச்சைப்படுத்தும் விதமாக பேசி வரும் அவர்கள், தன் மீது பெட்ரோல் குண்டு வீசி எரிக்க வேண்டும் எனக்கூறி கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல் தனது அனுமதியின்றி தனது சொந்த விஷயங்கள் தொடர்பாக பல யூ-டியூப் சேனல்கள் கருத்துகளை வெளியிட்டு வருவதை தான் விரும்பவில்லை எனக்கூறிய அவர், அத்தகையை செயல்களில் இனி ஈடுபடுவோர் மீது மானநஷ்ட வழக்கு தொடுக்கவுள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், தனது கவுரவத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டு வரும் துணை நடிகை கராத்தே கல்யாணி மற்றும் நடன இயக்குநர் ராகேஷ் மீது தகுந்த நடவடிக்கை வேண்டி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளதாகவும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் உறுதி அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.