கோடம்பாக்கம் Corner

சின்னத்திரையில் ரொம்ப பிரபலமானவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. பவர் பாண்டி உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.1999-ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் குழந்தைத் தொகுப்பாளராக அறிமுகமானவர் திவ்யதர்ஷினி.

அதனைத் தொடர்ந்து தொலைக்காட்சி உலகில் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி, முன்னணித் தொகுப்பாளராக இப்போது வலம் வருகிறார். சினிமாவில் பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் தலை காட்டியுள்ளார்.

கடந்த 2017ம் ஆண்டு டிடி, ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணப் பந்தம் நீடிக்கவில்லை. இருவரு சட்டப்படி பிரிந்து விட்டனர். தொடர்ந்து டிடி சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் இவர் தனது புதிய இன்ஸ்டா பக்கத்தில் ஒரு எமோஷனல் பதிவை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ”10 வயது உள்ள சிறுவன் அவனது அப்பா அம்மாவுடன் வந்து என்னுடன் செல்ஃபி எடுக்க வேண்டும் தெரிவித்தான். ஃபோட்டோ எடுத்து கொண்டோம். கொஞ்சம் நேரம் கழித்து மறுபடியும் என்னிடம் வந்த அவன் என்னை மிகவும் பிடிக்கும் என்றும் அதனை சொல்வதற்கு பயமாக இருந்ததாகவும் தெரிவித்தான். எவ்வளவு இனிமை மிக்கவனாக, மரியாதை மிக்கவனாகவும் அவன் இருக்கிறான்.

பின்னர் நான் காரில் ஏறிய போது நான் அவனை பார்த்து கையசைத்தேன். அப்போது அவன் ஃபோனில் என்னுடன் எடுத்த ஃபோட்டோவை வால் பேப்பராக வைத்திருந்தான். நீ எங்க இருந்தாலும் சிறப்பானவனாகவும் ஜென்டில்மேனாகவும் வளர்வாய். உன் பெற்றோரும் உன் Girl Friendம் மிகவும் அதிர்ஷ்டசாலி' என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார் திவ்யதர்ஷினி ?

இவற்றையும் பார்வையிடுங்கள்

அட்டக்கத்தி தொடங்கி கபாலி வரை அட்டகாசமான மண்ணின் கதைகளைப் படமாகத் தந்தவர் பா.இரஞ்சித்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி தொற்று குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1 அன்று உலக சுகாதார நிறுவனத்தால் அனுசரிக்கப்படுகிறது.

சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்குரா, கௌதம்மேனன்,வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள தமிழ் ஆந்தாலஜி படம் “பாவகதைகள்”.