கோடம்பாக்கம் Corner

கடந்த 40 ஆண்டு காலமாக பிரசாத் ஸ்டூடியோவில் இசையமைப்பு மற்றும் இசைப் பதிவு செய்து வந்த இளையராஜாவை அங்கிருந்து ஸ்டுடியோ நிர்வாகம் தன்னை வெளியேற்ற தடை கோரி இளையராஜா வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை 2 வாரத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிரபித்துள்ளது.

பிரசாத் ஸ்டூடியோ, இளையராஜா இடையிலான சமரச பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் உயர்நீதிமன்றம் இவ்வாறு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

‘‘ அன்னக்கிளி படத்துக்கு இசையமைத்த காலம் முதல், ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களின் இசையை இளையராஜா இசையமைத்து காற்றில் கலந்து விட்டது இந்த இசைக்கூடத்தில்தான். ஆனால், கடந்த சில மாதங்களாக அவரால் பிரசாத் ஸ்டுடியோவுக்குள் நுழைய முடியவில்லை. காரணம், பிரசாத் ஸ்டுடியோவின் நிர்வாகம் எல்.வி.பிரசாத்தின் மகன் உயிரோடு இருந்தவரை அவர் பொறுப்பில் இருந்தது.

தற்போது எல்.வி.பிரசாத்தின் பேரன் சாய் பிரசாத்திடம் ஸ்டுடியோ நிர்வாகம் வந்துவிட்டதால் இந்தப் பிரச்சனை வெடித்துள்ளது. அவர் இளையராஜாவின் இசைக்கூடம் இருக்கும் இடத்தில் பல அடுக்கு அடுக்குமாடிக் குடியிருப்பு கட்ட முடிவு செய்தே இளையராஜாவை காலி செய்யச் சொல்கிறாராம்.

கடைசியாக மிஷ்கின் இயக்கத்தில் உருவான ‘சைக்கோ’ படத்துக்கு இசைப் பணிகளை மேற்கொண்ட பிறகு இளையராஜா பிரசாத் இசைக்கூடத்துக்கு செல்லவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவற்றையும் பார்வையிடுங்கள்

அட்டக்கத்தி தொடங்கி கபாலி வரை அட்டகாசமான மண்ணின் கதைகளைப் படமாகத் தந்தவர் பா.இரஞ்சித்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி தொற்று குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1 அன்று உலக சுகாதார நிறுவனத்தால் அனுசரிக்கப்படுகிறது.

சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்குரா, கௌதம்மேனன்,வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள தமிழ் ஆந்தாலஜி படம் “பாவகதைகள்”.