கோடம்பாக்கம் Corner

‘எல்.கே.ஜி' படத்தைத் தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி நடித்து, என்.ஜே.சரவணன் என்பவருடன் இணைந்து இயக்கியுள்ள படம் 'மூக்குத்தி அம்மன்'.இதில் நயன்தாரா அம்மன் வேடம் போட்டுள்ளார். இந்தப் படத்தின் முதல் தோற்றம் பிப்ரவரி 29-ம் தேதி வெளியிடப்பட்டது.

அதில் அம்மன் வேடத்தில் நயன்தாரா இருப்பது போன்றுவடிவமைத்திருந்தனர். மேலும், படம் மே மாதம் வெளியாக இருப்பதையும் உறுதிப்படுத்தியிருந்தனர். இதன்பிறகுதான் திருப்பம் நடந்தது. 'மூக்குத்தி அம்மன்' முதல் தோற்றத்தைப் பார்த்து ஆர்.ஜே.பாலாஜிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள்.

அவர்கள் அனைவருக்குமே தனது நன்றியைத் தெரிவித்து வந்தார் ஆர்.ஜே.பாலாஜி. அப்போது அவரது ட்விட்டர் பக்கத்தை பின்தொடரும் துர்கை ராஜ் என்பர் "யாரு அம்மன் வேடம் போடணும் அப்படிங்கிற கூறுபாடு இல்லாமல் போய்விட்டது!" என்று ‘நயன்தாரா அம்மன் வேடம் போட்டது தவறு’ என்ற அர்த்ததில் கேள்வி எழுப்பினார்.

அவருக்கு பதிலடிக் கொடுக்கும் வகையில் "துர்கை ராஜ்.. உங்கள் பெயரில் இருக்கிற கடவுள் தான் உங்களுக்கு நல்ல புத்தியைக் கொடுக்கணும்" என்று பதில் அளித்துள்ளார் ஆர்.ஜே.பாலாஜி. நிஜ கடவுளுக்கும், மனிதனால் உருவாக்கப்பட்ட கடவுளுக்கும் இடையே நடக்கும் போராட்டமே இந்தப் படத்தின் கதை என்று ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இவற்றையும் பார்வையிடுங்கள்

தென்னிந்திய மொழிகள், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியானால் அதை ‘பான் இந்தியா பிலிம் என்று அழைக்கிறார்கள். 'கே.ஜி.எஃப்' அப்படியொரு படம்தான்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி தொற்று குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1 அன்று உலக சுகாதார நிறுவனத்தால் அனுசரிக்கப்படுகிறது.

சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்குரா, கௌதம்மேனன்,வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள தமிழ் ஆந்தாலஜி படம் “பாவகதைகள்”.