கோடம்பாக்கம் Corner

இந்திப் படவுலகில் தனக்கென ரசிகர்களைக் கொண்ட அஜய் தேவ்கன் ஒரு ஸ்டண்ட் மாஸ்டரின் மகன். நடிகை காஜோலை மணந்தவர். கடந்த ஜனவரி மாதம் இவரது நடிப்பில் வெளியான ‘தானாஜி’ திரைப்படம் 300 கோடி வரை வசூல் செய்து இமாலய சாதனை படைத்தது.

இதையடுத்து அஜய் தேவ்கன் கால்பந்து பயிற்சியாளர் சயத் அப்துல் ரஹீமின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி நடித்து வரும் 'மைதான்' ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இதனையடுத்து இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் 'ஆர்ஆர்ஆர்' உட்பட சில படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, விஜய்யின் பிகில் திரைப்படத்துடன் ரிலீசான ‘கைதி, விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. கார்த்தி நடித்திருந்த இந்தப் படத்தில் அவருக்கு ஜோடி கிடையாது, பாட்டு கிடையாது. ஆனால், இவற்றை போக்கும் விதமாக அதிரடி ஆக்‌ஷன், சென்டிமென்ட் என தனது அற்புதமான நடிப்பால், ஸ்கோர் செய்து 'டில்லி' என்ற லாரி டிரைவர் கதாபாத்திரத்தில் நடித்து கார்த்தி கைதட்டல் வாங்கினார்.

தற்போது இந்த படத்தை எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனமும் ரிலையன்ஸ் வயாகாம் நிறுவனமும் இந்தியில் ரீமேக் செய்கின்றன. முதலில் நடிகர் ஹிருத்திக் ரோஷனுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் 75 கோடி ஊதியம் கேட்டதாகத் தெரிகிறது. ஆனால் ஹ்ருத்திக்கின் வசூல் சந்தை தற்போது 150 கோடி அளவுக்கே இருப்பதால் லாபம் குறைவாக கிடைக்கும் என்பதால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது.

இந்நிலையில் தற்போது அஜய் தேவ்கனுக்கு 60 கோடி சம்பளமும் கனடா நாட்டின் விநியோக உரிமையும் அவருக்கு சம்பளமாகப் பேசப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதை அஜய் தேவ்கன் ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் பட நிறுவனங்கள் ஒப்பந்தத்தைப் போட்டுள்ளனவாம். கைதி இந்தி ரீமேக்கில் நடிக்க இருப்பது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அஜய் தேவ்கன், 'தமிழில் வெளியான கைதி படத்தின் இந்தி ரீமேக்கில் நான் நடிக்கிறேன். இப்படம் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி வெளியாகும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இவற்றையும் பார்வையிடுங்கள்

'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் " ஏலே" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.

வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.

கடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.

ஜூனியர் என்டிஆர், சிரஞ்சிவி மகன் ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள்

தமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.