கோடம்பாக்கம் Corner

கோலிவுட்டில் சிறு தயாரிப்பாளர்கள் தரப்பில் தீர்க்க முடியாத பல பிரச்சினைகள் காலம் காலமாக இருந்து வருகின்றன. இப்போது உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்பாளர் சங்க நிர்வாகமோ, நடிகர் சங்க நிர்வாகமோ இல்லாமலும் தமிழ் சினிமா தடுமாறிக் கொண்டிருக்கிறது.

பைரசி, அதிக டிக்கெட் கட்டணம், பார்க்கிங் கட்டணம், சிலருடைய தியேட்டர் சிண்டிகேட் மேலும் வெளியில் சொல்ல முடியாத திரைமறைவு வியாபாரப் பிரச்சினைகள் என எவ்வளவோ உள்ளன. இதனிடையே சின்ன பட்ஜெட் தமிழ்ப் படங்களை தமிழக அரசே ஒரு குழு அமைத்து அவற்றை வியாபாரம் செய்யவும், திரையுடவும் உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் 'தண்டச்சோறு' என்ற படத்தை இயக்கித் தயாரித்திருக்கும் ராஜன் போஸ் என்பவர் செங்கோட்டையிலிருந்து சென்னைக்கு நடைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

போன மாதம் பிப்ரவரி மாதம் 8ம் தேதி தன்னுடைய நடைப்பயணத்தை ஆரம்பித்தவர் ஒரு நாளைக்கு 30 கி.மீ வரை நடந்து, வரும் 9 அல்லது 10ம் தேதி சென்னையை அடைய உள்ளார். தமிழக முதல்வரைச் சந்தித்து கோரிக்கை மனுவை அளிக்க உள்ளாராம்.

இதுபற்றி பேசியியிருக்கும் அவர், "ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவன் நான். 17 வயது முதலே சினிமா மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தேன். ஆனால், ராணுவத்துக்குச் சென்று விட்டேன். பணி ஓய்வு பெற்ற பிறகு நானே 'தண்டச்சோறு' என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்து, இயக்கி முடிச்சிருக்கேன்.. இப்போது இந்தப் படத்தை வியாபாரம் செய்ய வினியோகஸ்தர்களிடம் பேசினால் அனைத்து உரிமைகளையும் எழுதிக் கொடுக்கச் சொல்கிறார்கள். மேலும் தியேட்டர்கள் கிடைப்பதும் கடும் சிரமமாக உள்ளது.

இது மாதிரி 1000க்கும் மேற்பட்ட படங்கள் திரைக்கு வராமல் தடுமாறிக்கொண்டிருக்கின்றன. அப்படிப்பட்ட படங்களை வெளியிட அரசு உதவி செய்ய வேண்டும். இன்னொரு விசயம்.. நான் 'டைட்டானிக்' படத்தை மலையாள டிவியில் ஒளிபரப்ப மொழி மாற்ற வசனம் எழுதிக் கொடுத்துள்ளேன். 'ஹலோ' என்ற தெலுங்குத் திரைப்படத்திற்கு மலையாளத்தில் வசனம் எழுதியுள்ளேன். 'ராமாயணம்' தொடருக்கு மலையாளத்தில் வசனம் எழுதியுள்ளேன். நானே பல குரலில் பேசுவேன். இப்படி எனக்கும் சினிமாவுக்கும் நிறையவே தொடர்பு உண்டு.

சின்னப் படங்களின் விடுதலைக்காக நடக்கும் எனது நடைப் பயணத்திற்கு சினிமா தரப்பினர் யாருமே உதவி செய்யலை. ஆனால், வழியெங்கும் பொதுமக்கள் ஆதரவு தருகின்றனர். இன்று மதியம் கூட கூழ் குடித்துத்தான் பசியைத் தீர்த்துக் கொண்டேன். ஓட்டலில் கூட ரூம் எடுக்காமல், நடைபாதையிலும், கோயில்களிலும் தான் தங்குகிறேன். சினிமா எடுக்க பலர் வருகிறார்கள். ஆனால், அவர்கள் சரியான விதத்தில் தொழில் செய்ய இங்கு யாருமே ஆதரவு தருவதில்லை," என்று வருத்தத்தமா சொல்கிறார் ராஜன் போஸ்.

சினிமாவைக் காப்பாற்றுங்கள் எனப் போராடத் தெருவிற்கு வந்திருக்கும் இந்தத் தயாரிப்பாளரை கண்டு கொள்ளவார்களா தமிழ்ச்சினிமாவின் நாயகர்களும், நட்சத்திர இயக்குனர்களும் ?

இவற்றையும் பார்வையிடுங்கள்

அட்டக்கத்தி தொடங்கி கபாலி வரை அட்டகாசமான மண்ணின் கதைகளைப் படமாகத் தந்தவர் பா.இரஞ்சித்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி தொற்று குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1 அன்று உலக சுகாதார நிறுவனத்தால் அனுசரிக்கப்படுகிறது.

சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்குரா, கௌதம்மேனன்,வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள தமிழ் ஆந்தாலஜி படம் “பாவகதைகள்”.