கோடம்பாக்கம் Corner

விஷால் நெருங்கிய நண்பர், பின் காதலி என்றெல்லாம் கதைக்கப்பட்ட வரலட்சுமி தற்போது முற்றாக விஷாலிடமிருந்து விலகி பத்துக்கும் அதிகமான படங்களில் வில்லியாக நடித்துக்கொண்டிருக்கிறார். ‘சேவ் சக்தி’ என்ற அமைப்பின் மூலம் சமூக சேவையும் செய்துவரும் அவரிடம் ‘மீ டூ’ இயக்கம் தமிழ் சினிமாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வில்லையே?’ என்று சமீபத்தில் கேட்கப்பட்டது.

இந்த கேள்விக்கு பதில் அளித்த அவர், நயன் தாரா மீது துளியும் பயமில்லாமல் சாட்டையை சொடுக்கியிருக்கிறார்.

அவர் சொன்ன பதில் இதுதான். “பெண்கள் அனைவரும் தைரியமாக இருந்தால் பேசலாம். பெண்கள் சிலர் நாம் பேசினால் சினிமா வாழ்க்கை என்னவாகுமோ என்று தயங்குகிறார்கள். இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் நான், சின்மயி உள்ளிட்ட சிலர் பேசினோம். அதற்குப் பிறகு எந்தவொரு நாயகியுமே பெரிதாகப் பேசவில்லை. அவர்களுக்கு ஒரு விஷயம் நடக்கும்போது மட்டுமே, அதைப் பற்றிச் சிந்திக்கிறார்கள். ராதாரவி தன்னைப் பற்றிப் பேசியவுடன்தான் நயன்தாரா கோபமாகி அறிக்கை கொடுத்தார். ஆனால், அதற்கும் முன்பு மீடூ வெடித்த நேரத்தில் நயன்தாரா பேசியிருந்தால் எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும். ஏனென்றால், அவரெல்லாம் பெரிய இடத்தில் இருக்கிறார். நாங்கள் எல்லாம் ஜூனியர் நடிகர்கள், அவரெல்லாம் சீனியர் நடிகை. பெரிய நடிகைகள் பேசும்போது சீரியஸாக எடுத்துக்கொள்வோம். ஆனால், அவர்களில் யாருமே வாயைத் திறக்கவே மறுக்கிறார்கள். மற்ற பெண்களுக்கு நடக்கும்போது நமக்கு என்ன என்று இருப்பதுதான் இங்கே பிரச்சினை”. சரத்குமாரின் மகளா, கொக்கா ?

இவற்றையும் பார்வையிடுங்கள்

அட்டக்கத்தி தொடங்கி கபாலி வரை அட்டகாசமான மண்ணின் கதைகளைப் படமாகத் தந்தவர் பா.இரஞ்சித்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி தொற்று குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1 அன்று உலக சுகாதார நிறுவனத்தால் அனுசரிக்கப்படுகிறது.

சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்குரா, கௌதம்மேனன்,வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள தமிழ் ஆந்தாலஜி படம் “பாவகதைகள்”.