கோடம்பாக்கம் Corner

தமிழ் திரையுலகில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் புதிய படங்களை திரைக்கு கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், இந்த வாரம் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை பொன் மாணிக்கவேல், எட்டுத்திக்கும் பற, ஜிப்ஸி, இம்சை அரசி, காலேஜ் குமார், வெல்வெட் நகரம், இந்த நிலை மாறும் ஆகிய 7 படங்கள் திரைக்கு வருகின்றன.

இதில் பொன் மாணிக்கவேல் படத்தில் பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ் ஜோடியாக நடித்துள்ளனர்.இதில் பிரபுதேவா போலீஸ் அதிகாரியாக வருகிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி உள்ளது. ஜிப்ஸி படத்தில் ஜீவா, நடாஷா சிங், லால் ஜோஷ் ஆகியோர் நடித்துள்ளனர். குக்கூ, ஜோக்கர் உள்ளிட்ட படங்களை எடுத்து பிரபலமான ராஜூமுருகன் இயக்கி உள்ளார்.

காலேஜ் குமார் படத்தில் பிரபு, ராகுல் விஜய், மதுபாலா, பிரியா ஆகியோர் நடித்துள்ளனர். ஹரி சந்தோஷ் இயக்கி உள்ளார். எட்டுத்திக்கும் பற படத்தில் சமுத்திரக்கனி, சாந்தினி நடித்துள்ளனர். வெல்வெட் நகரம், வரலட்சுமி சரத்குமாரை முதன்மை கதாபாத்திரமாக வைத்து தயாராகி உள்ளது. மனோஜ்குமார் நடராஜன் இயக்கி உள்ளார்.

சமீபமாக வாழ்க்கை வரலாற்று திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

தமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.

ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரவுலிங், தனது இக்காபாக் (The Ickabog) எனும் ஒரு அரக்கனைப் பற்றிய விசித்திரக் கதையின் முதல் பாகத்தை ஆன்லைனில் இலவசமாக வெளியிட்டுள்ளார்.

21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 2003 ஆமாண்டு விண்ணுக்கு பூமியின் தாழ்வு ஒழுக்கில் வலம் வந்து கொண்டிருக்கும் ISS என்ற சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்று திரும்புகையில் எந்திரக் கோளாறால் கொலம்பியா என்ற விண் ஓடம் விபத்தில் சிக்கியது.

இளையராஜா எனும் அற்புதக் கலைஞனை 60-களுக்கு பிறகு பிறந்த யாராலும் தவிர்க்கவே முடியாமல் அன்றாடம் கடந்து செல்ல வேண்டியிருக்கும்.

பன்னிரு இராசிகளுக்குமான ஜுன் மாத இராசி பலன்கள். பரம்பரை ஜோதிடர் பெருங்குளம் இராமகிருஷ்ணன் கணித்துத் தரும் துல்லியமான பலன்கள். ஒவ்வொரு ராசியினருக்குமான பரிகார விபரங்களும் எளிமையான விளக்கங்களும்.