கோடம்பாக்கம் Corner

கல்லூரி மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் சொல்லி எங்கெங்கோ அழைத்துச் சென்று, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக, வில்லன் நடிகர் சூர்ய பிரகாஷின் மகன் விஜய் ஹரிஷைக் காவல் துறையினர் கைது செய்திருப்பது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்குது.

தூரல் நின்னு போச்சு, வசந்த காலம் உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர நடிகராகவும், வில்லன் வேடங்களிலும் நடித்திருந்தவர் நடிகர் சூர்ய பிரகாஷ். இவர் அண்மையில் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தந்தையாக நடித்திருந்தார். இவரது மகன் விஜய் ஹரிஷ், நாங்களும் நல்லவங்க தான் என்ற படத்தில் நடித்து வந்தார்.

இந்நிலையில், வண்ணாரப்பேட்டேயைச் சேர்ந்த பி.காம் இரண்டாம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவி ஒருவருடன் பழகி வந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் தனது வீட்டுக்கு அந்த மாணவியை அழைத்து சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துக் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும் மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததை வீடியோ எடுத்து ஆன்லைனில் பதிவிடுவதாக மிரட்டி பலமுறை அந்த மாணவியுடன் உறவு கொண்டதாகவும் விஜய் ஹரிஷ் மீது போலிசார் பல பிரிவுகளில் போலிசார் வழக்குத் தொடுத்தாகத் தெரிவந்துள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி நேற்று முன்தினம் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் நடிகர் விஜய் ஹரிஷை கைது செய்து 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். இது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் எச்.விநோத் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடித்து வரும் படம் 'வலிமை'.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

முந்தைய பாகத்துக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! - பாகம் - 2 (We are Not Alone..Part-2)

கடந்த தொடரில் நாசாவின் SETI என்ற திட்டம் குறித்துத் தெரிவித்திருந்தோம். அது தொடர்பான விபரங்களை சுருக்கமாக முதலில் பார்ப்போம். SETI என்பது ஆங்கிலத்தில் Search for extraterrestrial intelligence அதாவது விண்வெளியில் அறிவுத்திறன் மிக்க உயிரினங்களுக்கான தேடல் என்று விரிவு பெறும்.

தமிழ் நாட்டிற்கே தலைமை தாங்க தகுதியானவர்கள்...அரசியலை தூய்மைப்படுத்திவிடுவார்கள்...

டாம் & ஜெர்ரி ஆகிய பூனையும் எலியும் விரட்டி விரட்டி சண்டையிட்டுக் கொள்ளும் காட்டூன்களை ரசிக்காத ரசிகர்களே இல்லை எனலாம்.