கோடம்பாக்கம் Corner

சிவாஜிக்கு ‘வீரபாண்டி கட்டப்பொம்மன்’ எப்படி ஒரு திரை அடையாளமோ அப்படித்தான் ‘கர்ணன்’ படம் தனுஷுக்கு.  படத்துக்கு கர்ணன் பட தலைப்பை வைக்க கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

இந்நிலையில் இய்குனர் மாரி செல்வராஜிடம் படத்துக்கு ஏன் இந்தத் தலைப்பைச் சூட்ட வேண்டும் என்று கேட்டபோது, “கர்ணன் என்று ஏன் படத்துக்குப் தலைப்பு வெச்சீங்கன்னு எல்லோரும் என்னிடம் கேட்குறாங்க. படத்தில் தனுஷ் சார் கேரக்டர் பெயர் ‘கர்ணன்.’ மகாபாரதக் கர்ணன் எல்லாவற்றையும் தானம் கொடுக்கிற கர்ணனாக வாழ்ந்து இறந்தார். ஆனால், இந்தக் கர்ணனிடம் கொடுப்பதற்கு எதுவுமே கிடையாது.

இவன் எனக்குக் கொடு, எனக்குத் தா என்று தனக்கான விஷயங்களை, தனக்கான உரிமைகளைக் கேட்பவனாக இருப்பான். தமிழ் நாட்டில் இதுபோல் கையேந்துந்து கோடிக்கணக்கான கர்ணன்களை என்னால் காட்டமுடியும் இந்த முரண் பகடியை சொல்லவே கர்ணன் என்று பெயர் வைத்தேன். இந்தத் தலைப்பை மாற்ற வேண்டும் என்ற நிலை வந்தால் மாற்றுவதைத் தவிர வேறு வழி இருக்காது. ஆனால் கதாபாத்திரத்தை மாற்றமுடியாது இல்லியா?’ என்றார் நம்மிடம்.

எப்படிச் சாத்தியமானதாம் மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணி? அவரே மனம் திறந்தார் “ ‘பரியேறும் பெருமாள்’ வெளியாகி 15 நாட்கள் ஓடிருச்சி. தனுஷ் சார் போன் பண்ணிப் பேசினார். ஆனால், அப்போது அவர் படம் பார்க்கவில்லை. ‘உங்க படம் பத்தி நிறைய கேள்விப்பட்டேன். கதையிருந்தா சொல்லுங்க’ன்னு சொன்னார்.

ஊர்ல மாடு மேய்ச்சிட்டு இருக்கும்போதிருந்தே சினிமா ஆசைதான். ஆனால், எந்த ஹீரோவுக்கு நாம கதை பண்றது, இவங்கல்லாம் நம்ம கதைக்குள்ள வருவாங்களான்னு அப்போ ஒரு கேள்வி இருக்கும். ஆனால், தனுஷ் சார் சினிமாவுக்குள் வந்தபிறகு என் கதைக்கான ஹீரோ, என் கதைக்கான முகம் கிடைத்துவிட்டது என்கிற நம்பிக்கை எனக்கு வந்தது.

உதவி இயக்குநராக இருக்கும்போதே தனுஷ் சாரிடம் ‘கர்ணன்’ கதையைச் சொல்ல முயற்சி செய்தேன். அப்போது அவரைப் பார்க்கக் கூட முடியல! இப்போது அவரோடு படம் பண்ணுறேன். உண்மையும் அதன் மூலமா கிடைக்கிற வெற்றியும் உங்களை கைவிடாது” என்றார். படப்பிடிப்பைக் காண வந்திருந்த தனது ஒன்றரை வயது மகளை அனைத்தபடி...

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வந்த ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் எதிர்பாராமல் நிகழ்ந்த கோர விபத்தால் உதவி இயக்குநர் உட்பட பலர் உயிரிழந்தனர். இதனால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

தமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.

ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரவுலிங், தனது இக்காபாக் (The Ickabog) எனும் ஒரு அரக்கனைப் பற்றிய விசித்திரக் கதையின் முதல் பாகத்தை ஆன்லைனில் இலவசமாக வெளியிட்டுள்ளார்.

21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 2003 ஆமாண்டு விண்ணுக்கு பூமியின் தாழ்வு ஒழுக்கில் வலம் வந்து கொண்டிருக்கும் ISS என்ற சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்று திரும்புகையில் எந்திரக் கோளாறால் கொலம்பியா என்ற விண் ஓடம் விபத்தில் சிக்கியது.

கொரோனா வைரஸ் குணப்படுத்தக் கூடிய ஒன்று தான். அதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தது தேவையில்லாது, என்று நடிகரும் தயாரிப்பாளருமான மன்சூரலிகான் தெரிவித்துள்ளார்.

தமிழர் கலைகளில் 'வில்லுப்பாட்டு' ஒரு முதுகலையாகும். போர்களங்களில் போராடிய வீரர்கள் மத்தியிலிருந்து, கதையும் பாடலுமாகப் பிறந்த கலைவடிவம் எனவும் சொல்கின்றார்கள். இதனைத் தமிழகத்தில் பன்னெடுங்காலமாகச் சொல்லி வந்த ஒரு பெண்ணின் வரலாற்றினை, வாழ்வினை, தமிழுக்குப் புதிய இசைவடிவமான ராப் பாடல் மூலம் சொல்கின்றாள் ஒரு பெண்.