கோடம்பாக்கம் Corner

கடந்த மாதம் விஜய் வீட்டில் நடந்த வருமான வரிச் சோதனை பரபரப்பாகப் பேசப்பட்டது. அந்த சமயத்தில் ரஜினிக்கு 68 லட்சம் ரூபாய வருமான வரிச் சலுகைை காட்டப்பட்டது என்ற விவாதம் எழுந்தது.

தற்போது நயன்தாராவுக்கு 45 லட்சம் ரூபாய் அளவுக்கு வருமான வரி சலுகை காட்டபட்ட தகவலும் கசிந்துள்ளது. இதற்கு கைமாறாக அவரை சென்னை வருமானவரித்துறை அலுவலகத்தின் ஆண்டு விழாவிற்கு கடந்த அக்டோபரில் அழைத்துள்ளனர். ஆனால் நயன்தாரா அப்போது படப்பிடிப்பில் இருந்ததால் வரமுடியாத நிலையில் வேறொரு விழாவுக்கோ அல்லது நீங்கள் கூறும் வேறு விழாவிலோ கலந்துகொள்கிறேன் என்றாராம்.

இதன் அடிப்படையில் வருமானவரித்துறையில் பணியாற்றுவோர் குடும்பத்தினருக்காக நடந்த குடும்ப நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர்கள் முன் ஒரு நிமிடம் நடனமாடி, வசனம் பேசி, இளம் பெண்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார்.

இதன் அடுத்தகட்டமாக இன்று காலை சென்னையில் வருமான வரித்துறை நடத்திய பெண்கள் தின சிறப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் நயன்தாரா.

கொரோனா வைரஸ் நாவல் காரணமாக வடக்கு இத்தாலி முழுவதும் மில்லியன் கணக்கான மக்களை பூட்டிக் கொள்ளும் ஒரு ஆணையில் இத்தாலிய பிரதமர் கியூசெப் கோன்டே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கையெழுத்திட்டார்.