கோடம்பாக்கம் Corner

இயக்குனர் பா. இரஞ்சித் திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன்பு ஓவியக்கல்லூரியில் பயின்றவர். இவரோடு படித்த நண்பர்கள் பலரும் சினிமா மற்றும் சிற்பக்கலை, ஓவியர்களாக இருக்கிறார்கள். கலை சம்பந்தப்பட்ட துறைகளில் பலர் பணியாற்றி வருகின்றனர்.

அவரது நண்பர்களில் ஒருவரான பிரபுராம் சென்னையில் Artcafe என்னும் பெயரில் புதிதாக Coffee Shop ஒன்றை துவங்கியிருக்கிறார். இதன் துவக்க விழாவில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் பா.இரஞ்சித்,

"எனது நண்பர்கள் எந்த புது முயற்சி செய்தாலும், அதில் கலை முக்கிய பங்கு வகிக்கும். கலையோடு எதையும் அணுகுவதில் பெரும் உற்சாகம் இருக்கும் எங்களுக்கு எப்போதும். அந்த வகையில் வெறும் காபி ஷாப் என்றில்லாமல், கலைத்தன்மையோடு இதனை வடிவமைத்திருக்கிறார்கள். இங்கு நிறைய ஓவியங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன, புதிய ஓவியங்கள் தொடர்ந்து இங்கு காட்சிக்கு வைக்கப்படும். கூடவே டாட்டு போன்றவையும் இங்கு இருப்பது மேலும் சிறப்பானதாகவும். நண்பன் பிரபுராமின் ArtCafe மென்மேலும் வளர வாழ்த்துகள். மகிழ்ச்சி" என்றார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

ரஜினி 45 என்றும் கமல் 61 என்றும் கொண்டாடும் ரசிகர்கள் 40 வருடங்களைக் கடந்து திரையுலகில் ஆட்சி செலுத்தும் பெண் நடிகர்களைக் கண்டுகொள்வதே இல்லை.

சுவிற்சர்லாந்தில் நடைபெற்று வரும் 73 வது லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் Open Door எனப்படும் பகுதி இம்முறை தென் கிழக்காசிய நாடுகளின் திரைப்படங்களுக்கு ஐரோப்பிய நுழைவாயிலாக தன் கதவுகளை திறந்திருந்தன.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

" இயற்கை மற்றும் விலங்குகளின் மீதான மனித நேசிப்பினையும், மனிதர்களுடனான நல்லிணக்கத்தை விலங்ககளிடமும், தோற்றுவிப்பதன் அடையாளமாக இந்தியக் கோவில் யானைகளை நான் பார்க்கிறேன். தயவு செய்து அந்த மரபை அழித்துவிடாதீர்கள் ! " என்றார் இயக்குனர் அன்னா போல்மார்க் (Anna Bohlmark ).

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

பாகுபலி படத்தில் பல்லாலத்தேவனாக நடித்து புகழ் பெற்ற நடிகர் ராணா டகுபதி.

வில்லியம் சாட்னர் எனும் ஆங்கில திரைப்பட இயக்குனர் யானைகளை அடிப்படையாக கொண்டு 'வனத்திற்குள் திரும்பு' என்ற திரைப்படத்தை எடுத்தார்.